தாதியா நெரிசல்
தாதியா நெரிசல் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், தாதியா மாவட்டத்தில், ரதன்கார் துர்கா தேவி கோவிலுக்கு (கொள்ளைக்காரர்கள் கோயில்) செல்லும் வழியில் சிந்து நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் அமைந்த நிகழ்ச்சியாகும். [1] நவராத்திரி விழாவின் போது பீதி அடைந்த பக்தர்கள் அலறியடித்து சிதறிய மக்களின் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.[2][3]
நாள் | 13 அக்டோபர் 2013 |
---|---|
அமைவிடம் | ரத்தன்கார், தாதியா மாவட்டம், மத்தியப் பிரதேசம், India |
இறப்புகள் | 115 |
காயமுற்றோர் | 110+ |
நிகழ்வு
தொகுதசரா பண்டிகையின் கடைசி நாளான 14.10.2013 முன்னிட்டு, மத்தியப் பிரதேச மாநிலம் டட்டியா மாவட்டம் ரத்னாகர் துர்கா மாதா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நெரிசலில் 115 பலியானார்கள். மற்றும் கோயிலுக்குச் செல்ல சிந்து நதியின் குறுக்கே ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்திலிருந்து விழுந்து 6 பேர் மரணமடைந்தார்கள். [4]