கொடை

(தானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சங்க காலத்தில் அரசர்கள் கொடை வள்ளல்களாக இருந்திருக்கிறார்கள். தம்மைப் பாடி வரும் புலவர்களுக்கும் மற்றவருக்கும் பொன்னையும் பொருளையும் வரையாது கொடுத்து மகிழ்ந்தமை சங்க இலக்கியங்களால் உணர முடிகிறது. பாரி, ஓரி, காரி, பேகன் போன்றோர் கடையேழு வள்ளல்கள் என்று போற்றப்பட்டனர். பாரி முல்லைக்குத் தேரையும் பேகன் மயிலுக்குப் போர்வையையும் அளித்து அழியாப் புகழ் பெற்றனர். ஆற்றுப்படை இலக்கியங்கள் மன்னர்களின் கொடைத் தன்மையைக் கூறுவனவாக இருத்தலைக் காண்கிறோம். கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மூலமும் மன்னர்களின் கொடைத்தன்மை அறிய முடிகிறது. மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவரான கர்ணனும் கொடை வள்ளல்களாக இருந்துள்ளார்.


கொடை குறித்து வள்ளுவாின் கூற்று

தொகு

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்காா்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு” .[1]

என்று நாம் ஈட்டும் செல்வம் மற்றவருக்கும் கொடுப்பதற்கே என்கிறாா் வள்ளுவா்.

கொடை குறித்து புறநானுறு கூறுவது

தொகு

“கொள்ளெனக் கொடுத்தல் உயா்ந்தன்று”.[2] வாங்கிக்கொள் என்று நாமே மனமுவந்து கொடுப்பது மிகச் சிறந்தது என்கிறது சங்க இலக்கிய நூலான புறநானுறு.

பாாியின் கொடை
தொகு

பாாி வள்ளல் மாாிக்கு ( மழை) நிகராகக் கொடுக்கக் கூடியவன் என்பதைப் பின்வரும் சங்க இலக்கியப் பாடல் உணா்த்துகிறது.

“பாாி பாாி என்று பலஏத்தி ஒருவா் புகழ்வா் செந்நாப் புலவா் பாாி ஒருவனு மல்லன் மாாியும் உண்டீண் டுலகு புறப்பதுவே”.

  1. குறள் 222
  2. புறநானுறு 204
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடை&oldid=3893678" இலிருந்து மீள்விக்கப்பட்டது