தானா மற்றும் ரிரி
தானா மற்றும் ரிரி (Tana and Riri) என்பது 1564 ஆம் ஆண்டில் பிறந்த இரண்டு சிறுமிகளைப் பற்றிய ஒரு இந்தியக் கதையாகும். இவர்கள் அக்பரின் அரச சபையில் பாடுவதற்கு கேட்டுக்கொண்டதாக அறியப்படுகிறது. [1] இந்தக் கதை குஜராத்தி நாட்டுப்புற கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. [2]
இந்த இரட்டையர்கள் குசராத்து மாநிலத்தில் விஷ்நகருக்கு அருகிலுள்ள வாட்நகர் என்று அழைக்கப்படும் வடக்கு நகரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தானா மற்றும் ரிரி என்ற இரு சிறுமிகளும் நரசி மகேதா என்பவரின் நெருங்கிய உறவினராவர். தானா மற்றும் ரிரி இருவரும் நரசி மகேதாவின் மகள் சர்மிஷ்டாவின் மகள்கள் ஆவர்.
மேதை
தொகுஅக்பரின் அவையில் இருந்த பாடகர் தான்சேன் ஒருசமயம் "தீபக்" என்ற இராகத்தைப் பாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார். இந்த இராகத்தை பாடுவதன் விளைவு என்னவென்றால், பாடகர் தனது உடலில் குணப்படுத்த முடியாத வெப்பத்தை உணரத் தொடங்குவார். மலகார் என்ற ஒரு இராகத்தைப் பாடினால் மழை பெய்து வெப்ப்பத்தை தணிவிக்கும். வெப்பத்தால் பாதிக்கப்பட்ட தான்சேன், அதை குணப்படுத்த மல்கார் என்ற இராகத்தைப் பாடுபவர்களைத் தேடி இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார். வாட்நகருக்கு வந்து, மல்கார் இராகத்தில் திறமையான பாடகர்களாக இருந்த தானா மற்றும் ரிரி ஆகிய இரு சகோதரிகளைப் பற்றி அறிந்து கொள்கிறார். தானா மற்றும் ரிரி சகோதரிகள் மல்கார் என்ற இராகத்தைப் பாடி தான்சேனை குணப்படுத்துகின்றனர். இந்த நிகழ்வை அறிந்த அக்பர் இச்ச்கோதரிகளை தனது அவையில் வந்து பாடும்படி கேட்டுக் கொள்கிறார். ஆனால் சமூகம் மற்றும் சமூகத்தின் பழமைவாத விதிமுறைகளின் காரணமாக கிராம தெய்வத்தின் சிலைக்கு முன்னால் பாடுவது மட்டுமே வழக்கம் என்பதால் அவர்கள் வர மறுத்து, கிணற்றில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் அக்பர் இதை அறிந்ததும், இவர்களது தந்தையிடம் மன்னிப்பு கேட்டு, தானா-ரிரிக்கு வாட்நகரில் அவர்களது நினைவாக சமாதி ஒன்று உருவாக்குமாறு தான்சேனிடம் கேட்டுக் கொண்டார். [3]
அக்பரின் இராணுவத் தாக்குதலுக்கு அஞ்சிய கிராமவாசிகள், பணியா என்ற மதத்திற்கு மாறி தாசநகர் என்ற இடத்திற்கு சென்றதாகவும் அறியப்படுகிறது.
ஆளுமை
தொகுதானா-ரிரிக்கு மரியாதை செலுத்தும் வகையில் வாட்நகரில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. தானா-ரிரி இசை விழா ஒவ்வொரு ஆண்டும் குசராத்து அரசாங்கத்தால் அவர்களின் அர்ப்பணிப்பிற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. [4] [5]
குறிப்புகள்
தொகு- ↑ Desai, Anjali H. (2007). India Guide Gujarat. India Guide Publications. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780978951702.
- ↑ Khan, Iqtidar Alam (1999). Akbar and his age. Northern Book Centre. p. 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788172111083.
- ↑ http://www.zazi.com/swanad/tanariri/tanariri.htm
- ↑ "Setting of a new Guinness book world record at Tana Riri festival in Vadnagar". DeshGujarat News from Gujarat. 10 November 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2017.
- ↑ "Tana Riri festival opens in Vadnagar, north Gujarat". DeshGujarat News from Gujarat. 21 November 2015. பார்க்கப்பட்ட நாள் 11 February 2017.