தானியல் மெக்கிலிவ்ரே பிரவுன்
இசுக்கொட்லாந்து வேதியியலாளர்
தானியல் மெக்கிலிவ்ரே பிரவுன் அல்லது தான் பிரவுன் (Daniel McGillivray Brown or Dan Brown) என்பவர் இசுக்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த நியூக்ளிக் அமில வேதியியலாளர் ஆவார். இவர் 1923 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் நாள் பிறந்தார். 1942 ஆம் ஆண்டு இராயல் வேதியியல் கழகத்திலும் 1982 ஆம் ஆண்டு இராயல் கழகத்திலும் உறுப்பினரானார். [1][2] கிளாசுகோ பல்கலைக்கழகத்திலும் கேம்பிரிட்ச்சிலுள்ள கிங்சு கல்லூரியிலும் பிரவுன் கல்வி கற்றார். பின்னர் கேம்பிரிட்ச்சிலுள்ள கிங்சு கல்லூரியில் ஓர் உறுப்பினராகவும் மாறினார். [1][2] 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று பிரவுன் காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Michael J. Gait (7 November 2018). "Biographical Memoirs of Fellows of the Royal Society: Daniel McGillivray Brown. 3 February 1923—24 April 2012". https://royalsocietypublishing.org/doi/full/10.1098/rsbm.2018.0008. பார்த்த நாள்: 3 January 2020.
- ↑ 2.0 2.1 "Obituary: Dr Daniel Brown". The Herald. 15 May 2012. https://www.heraldscotland.com/opinion/13057977.dr-daniel-brown/. பார்த்த நாள்: 3 January 2020. "Dr Daniel Brown, who has died aged 89, was one of the leading UK organic chemists of the 20th century. His research was instrumental in helping his Cambridge University colleagues James Watson and Francis Crick uncover the double helix, the molecular structure of DNA, the substance which carries genes from generation to generation."