தான்சானிய செவ்லகு இருவாய்ச்சி
கிழக்கத்திய மஞ்சள் அலகு இருவாய்ச்சி | |
---|---|
தான்சானியா காட்ட்சில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
குடும்பம்: | |
பேரினம்: | தோக்குசு
|
இனம்: | தோ. ருகே
|
இருசொற் பெயரீடு | |
தோக்குசு ருகே கெம்ப் & டெல்போர்ட், 2002 |
தான்சானிய செவ்லகு இருவாய்ச்சி (Tanzanian red-billed hornbill-தோக்குசு ருகே) என்பது புசெரோடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இருவாய்ச்சி சிற்றினமாகும். இது மத்திய தான்சானியாவில் காணப்படுகிறது. உருவா தேசியப் பூங்காவில் ராபர்ட் க்ளென் மற்றும் சூ ஸ்டோல்பெர்கர் ஆகியோரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து (ஐந்து) செவ்வலகு இருவாய்ச்சிகளும் முன்பு ஒத்தவையாகக் கருதப்பட்டன.[1]
விளக்கம்
தொகுதான்சானிய செவ்வலகு இருவாய்ச்சி (தாக்குசு ருகே) என்பது செவ்வலகு இருவாய்ச்சி குழுவில் உள்ள சிறிய இருவாய்ச்சி ஆகும். இவை வளைந்த, பிரகாசமான சிவப்பு அலகினைக் கொண்டுள்ளன. அலகின் நுனியில் அடர் ஆரஞ்சு நிறச் சிறிய புள்ளி காணப்படும். இவற்றின் விழி வெண்படலம் வெளிர் ஆரஞ்சு நிறத்திலிருந்து அடர் மஞ்சள் நிறம் வரை மாறுபடும். மேலும் இவற்றின் கண்மணி பொதுவாக அடர் கருப்பு நிறத்திலிருக்கும். பெரும்பாலான இருவாய்ச்சிகளைப் போலவே, பெண் மற்றும் ஆண் பறவைகளில் தங்கள் கண்களைச் சுற்றி நடுத்தர அளவிலான கருப்பு தோல் வட்டங்களைக் கொண்டுள்ளன. இவை சாம்பல் வெள்ளை கழுத்துகள் மற்றும் வயிற்றினைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றின் இறக்கைகள், அனைத்து செவ்வலகு இருவாய்ச்சிகளைப் போலக் கருப்பு இறகுகளால் சூழப்பட்டு, பெரிய மற்றும் சிறிய வெள்ளை புள்ளிகளைக் கொண்டுள்ளன. இவற்றின் வால் இறகுகள் வெளிப்புறத்தில் நீளமாகவும் கருப்பு நிறத்திலும் உட்புறத்தில் வெள்ளை நிறத்திலும் உள்ளன.
பரவல்
தொகுதான்சானியா செவ்வலகு இருவாய்ச்சி மத்திய தான்சானியாவில் காணப்படுகின்றது. இவை பொதுவாக உணவு ஏராளமாக இருக்கும் காடுகள் அல்லது புன்னிலத்தில் உள்ள மரங்களில் ஓய்வெடுக்கவோ அல்லது கூடு கட்டவோ செய்கின்றன.
படம்
தொகு-
தான்சானியாவின் செரெங்கெட்டி தேசியப் பூங்காவில் (ஆண்)
மேற்கோள்கள்
தொகு- Kemp, A.C. and W. Delport. 2002. Comments on the status of subspecies in the red-billed hornbill (Tockus erythrorhynchus) complex (Aves: Bucerotidae), with the description of a new taxon endemic to Tanzania. Annals of the Transvaal Museum 39: 1–8.
- Delport, W., A.C. Kemp, and J.W.H. Ferguson. 2004. Structure of an African Red-billed Hornbill (Tockus erythrorhynchus rufirostris and T. e. damarensis) hybrid zone as revealed by morphology, behavior, and breeding biology. Auk 121: 565–586.