தான்சா ஆறு
தான்சா ஆறு (Tansa River) என்பது மும்பை அருகே பாயக்கூடிய சிறிய ஆறாகும். இந்த ஆற்றின் நீரானது தான்சா ஏரி மூலம் மும்பை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஓர் மூலமாக உள்ளது. 1892இல் தான்சா அணைக் கட்டப்பட்டது. இது மிகப்பெரிய அணையாகும். இது 2 மைல் நீள மேட்டுக் கரையுடன் 118 அடி (36 m) உயரமும் உடையது. இதனுடைய அடிப்பகுதி 30 மீட்டர் நீள அடித்தளமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் 1.31 கன கி,மீ. நீர் தேக்கும் தன்மையுடையது.[1] இந்த அணையில் 38 நீர் வெளியேற்றுப் பாதைகள் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Tansa". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 26. (1911). Cambridge University Press.