தவம் செய்பவரைப் பற்றிக் கூறுவது தாபதவாகை.

'நாலிரு வழக்கின் தாபத பக்கம்' என்று தொல்காப்பியம் (1021) இதனைக் குறிப்பிடுகிறது. தவம் செய்வோரின் பணி எட்டு வகையில் அமைந்திருக்கும் என்பது தொல்காப்பியர் வகைப்பாடு.

தாபத வாழ்க்கை

தொகு

புறநானூறு 251, 252 பாடல்களில் மாற்பித்தியார் என்னும் புலவர் தாபத வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைக் காட்டுகிறார். அவை இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

  • மலையில் மூங்கில் போல் ஒழுகும் அருவியில் நீராடுவர்.
  • வெளிச்சத்துக்காகக் காட்டு யானை ஒடித்துப் போட்டுக் காய்ந்த விறகில் தீ மூட்டுவர்.
  • பின்புறம் தொங்கும் புரிசடையாடு வாழ்வர்.
  • அவர்களது சடை தில்லைக் காய்க் கொத்துப் போல் இருக்கும்.
  • இந்தச் சடையை வெயிலில் காயவைத்துக் கொள்வர்.
  • தாளி என்னும் இலையைக் கொய்து படையல் செய்து உணவாக்கிக் கொள்வர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாபத_வாகை&oldid=2017148" இலிருந்து மீள்விக்கப்பட்டது