தாமரை ஊசித்தட்டான்

பூச்சி இனம்

நீல வால் ஊசித்தட்டான் (blue-tailed damselfly) அல்லது தாமரை ஊசித்தட்டான் ( இசுனூரா எலிகன்சு) என்பது கோயெனாகிரியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த ஊசித்தட்டான் ஆகும்.[1]

உள்ளினமும் வகையினங்களும்

தொகு

எலிகன்சு உள்ளினத்தின் வகையினங்கள் பின்வருமாறு: [2]

  • இசுனூரா எலிகன்சு எபினேரி சுக்கிமிடு, 1938
  • இசுனூரா எலிகன்சு எலிகன்சு (வாண்டர் இலிண்டன், 1820)
  • இசுனூரா எலிகன்சு பொந்திகா சுக்கிமிடு, 1939
  • இசுனூரா எலிகன்சு f. இன்புசுகான்சு
  • இசுனூரா எலிகன்சு f. இன்புசுகான்சு-அபுசொலீட்டா
  • இசுனூரா எலிகன்சு f. உரூபெசென்சு
  • இசுனூரா எலிகன்சு f. டய்பிகா
  • இசுனூரா எலிகன்சு f. வயோலாசியா

விவரிப்பு

தொகு
 
புணர்ச்சி

தாமரை ஊசித்தட்டான் (Ischnura elegans) இனத்தின் உடல் 27 முதல் 35 மிமீ வரை வளரும்; சிறகு அகலம் 35 மிமீ வரை அமையும். பின்னிறகுகளின் நீளம் 14 முதல் 20 மிமீ வரை அமையலாம்.[3] முதிர்ந்தா ஆண் தாமரைத் தட்டானின் தலையும் கழுத்தும் நீலமும் கருப்பும் கலந்த பாணியில் இருக்கும். முன்னிறகுகளில் இருநிற சிறகுச்சூலகம் அமையும். கண்கல் நீல நிறத்தில் இருக்கும்.[4] They have a largely black abdomen with very narrow pale markings where each segment joins the nextமெட்டாம் உடல் துண்டம் வெளிர்நீலமாக இருக்கும். என்றாலும், முழு வெளிர்நீலத்திலும் கூட இருக்கலாம்.[4] ஓய்வில், பெரும்பாலான ஊசித்தட்டான்களின் சிறகுகள் பின்புறம் ஒன்றி மடிந்திருக்கும். ஆனால், தட்டான்களின் இறகுகள் வெளியே தட்டையாக நீட்டிக் கொண்டிருக்கும். ஆண் இளவுயிரியின் கழுத்தில் பசுமைநிழல் தட்டும்.[3]

பெண் தாமரை ஊசித்தட்டான்கள் பலவகை நிற வடிவங்களைக் கொண்டுள்ளன.[4]

இவை வண்ணத்துப் பூச்சி, பட்டாம் பூச்சி, கொசு, ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளை உண்டு அவற்றின் இனத்தைக் கட்டுப்படுத்துவனவாகக் காணப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையின் 2300 மீட்டர் உயரத்திலும் தாமரை ஊசித் தட்டான்கள் பறப்பதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.[5]

பரவல்

தொகு

இந்த ஊசித்தட்டான் இனம் பெரும்பாலும் ஐரோப்பாவிலும்[6] and நடுவண் கிழக்கு, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் வாழ்கிறது. இது ஒரு பொது ஊசித்தட்டான் இனமாகும்.

வாழிடம்

தொகு

ஊசித் தட்டான்கள் தேங்கிய அல்லது மெதுவாக நீர்பாயும் தாழ்நிலச் சூழலிலும் சதுப்பு நிலத்திலும் மாசுற்ற நீர்ப் பகுதியிலும் வாழ்கின்றன.[4]

காட்சிமேடை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bisby F.A., Roskov Y.R., Orrell T.M., Nicolson D., Paglinawan L.E., Bailly N., Kirk P.M., Bourgoin T., Baillargeon G., Ouvrard D. Catalogue of life
  2. Biolib
  3. 3.0 3.1 L. Watson and M. J. Dallwitz British Insects: the Odonata (Dragonflies and Damselflies
  4. 4.0 4.1 4.2 4.3 BDS - British Dragonfly Society
  5. புத்தகம்: பூச்சிகள் ஓர் அறிமுகம், ஆசிரியர்: ஏ. சண்முகானந்தம், வானம் பதிப்பகம், பக்கம் : 99
  6. Fauna europaea


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_ஊசித்தட்டான்&oldid=3739401" இலிருந்து மீள்விக்கப்பட்டது