தாம்ரா ஆறு (Dhamara river) என்பது ஒடிசா சந்தபாலி நகரின் தெற்கே பிரம்மாணி மற்றும் பைதரணி ஆறுகள் சங்கமிப்பதால் உருவாகும் ஒரு கூட்டு நீரோடையாகும்.[1] இது பத்ரக் மாவட்டத்தில் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அதன் கழிமுகத்திற்கு வடக்கே தம்ரா துறைமுகம் உள்ளது. கழிமுகத்திற்கு அருகிலேயே ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளுக்கான கூடு கட்டும் இடமான காஹிராமாதா சரணாலயம் உள்ளது.

இந்த ஆற்றின் முகத்துவாரம் 4 கிலோமீட்டர் (2.5 மைல்) அகலம் கொண்டது மற்றும் இது காலிபஞ்சா என்று அழைக்கப்படும் ஒரு தீவு உருவாக்கத்தால் பிரிக்கப்பட்ட இரண்டு தனித்துவமான ஆற்று கால்வாய்கள் வழியாக கடலுக்குள் நுழைகிறது. இரண்டு கால்வாய்களும் கடலில் சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல் அகலம்) அகலம் கொண்ட கனிகா மணல்திட்டு என்று அழைக்கப்படும் மற்றொரு தீவின் உருவாக்கத்தால் மேலும் பிரிக்கப்பட்டுள்ளன.[2]

உவர் நீர் முதலைகளுக்குப் பெயர் பெற்ற பிதர்கனிகா அலையாத்திக் காடுகளானது, தாம்ரா முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. தாம்ரா ஆறு வங்காள விரிகுடாவுடன் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ள வீலர் தீவு, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஏவுகணை ஏவுதல் தளத்தினைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rivers of Odisha". Archived from the original on 2012-08-18.
  2. "The Dhamra Port Company Limited".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்ரா_ஆறு&oldid=3990476" இலிருந்து மீள்விக்கப்பட்டது