தாயப்பன்மேட்டுக்கொட்டாய்

குனிச்சி ஊராட்சி (Kunichi Gram Panchayat), தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்தலி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். மேட்டுக் கொட்டாய் என்பது இந்த ஊரின் பொதுப் பெயர். நான்கு திசைகளில் இருந்தும் மேட்டுப் [உயர்ந்த] பகுதியாக இந்த ஊர் உள்ளது. தாயப்பன் என்பவர் இந்த ஊரில் முதலில் வாழ்ந்த மாந்தர் ஆவார். ஓலைக் குடிசையே கொட்டாய் என்று அழைப்பர் [வட தமிழக தமிழ்ச் சொல்]. அஞ்சல் குறியீட்டு எண். 635 602.