தாய்மொழியாக்கம்

தாய்மொழியாக்கம் என்பது ஒரு மொழி அதைத் தாய்மொழியாகப் பேசுவோரைப் பெறும் வழிமுறையைக் குறிக்கின்றது. பெரியவர்களால் இரண்டாவது மொழியாகப் பேசப்படும் ஒரு மொழி அவர்களின் பிள்ளைகளுக்குத் தாய்மொழி ஆகும்போது இது நடைபெறுகின்றது. தாய்மொழியாக்கம், மொழியியலாளர்களுக்கும், கிரியோல் மொழிகள் தொடர்பான ஆய்வாளருக்கும் ஆர்வத்துக்கு உரிய ஒரு விடயம் ஆகும். குறிப்பாக இரண்டாவது மொழி ஒரு பிட்யினாக இருப்பின் அது சிறப்புக் கவனம் பெறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்மொழியாக்கம்&oldid=1377901" இருந்து மீள்விக்கப்பட்டது