தாய்மொழியில் கல்வி

தாய்மொழியில் கல்வி என்பது ஒருவர் தனது தாய்மொழியில் கல்வி கற்றல், அதற்கான உரிமை மற்றும் ஏற்பாடுகளைக் பற்றியது. பல்வேறு ஆய்வுகள் தாய்மொழியில் கல்வி கற்பதே ஒருவரின் சிந்தனை வளத்துக்கும், உள சமூக வளர்ச்சிக்கும், கல்விக்கும் சிறந்தது என்று கூறுகின்றன. எனினும் பல்வேறு அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகள் பல நாடுகளில் தாய்மொழிக் கல்விக்கு ஏற்றதாக இல்லை.தாய்மொழி வழிக் கல்விதான் மிகச் சிறந்த குடிமக்களை உருவாக்கும். பண்பாட்டு வளம் சிறந்து விளங்க தாய்மொழி அவசியம். இன்றைய கல்விமுறை ஆங்கிலம் சாா்ந்து இருப்பது நல்லதல்ல. நம் நாட்டின் பெருமையே பன்முகத்தன்மைதான். அத்தகைய பன்முகத்தன்மையை அழியாமல் பாதுகாக்க தாய்மொழியை பாதுகாப்பது அவசியம். நாட்டின் பன்முகத்தன்மை அழியாமல் இருக்க அவரவா் தாய்மொழியில் கல்வி வழங்கப்பட வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்மொழியில்_கல்வி&oldid=3092468" இலிருந்து மீள்விக்கப்பட்டது