தாய்லாந்து தமிழர்

தாய்லாந்து தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் தாய்லாந்தில் வசிப்பவர்கள் ஆவர்.

முற்கால தாய் தமிழர்

தொகு

தாய்லாந்துக்கும் தமிழ்நாட்டும் நீண்ட கால அரசிய, வணிக, பண்பாடு தொடர்புகள் உண்டு. பழங்காலத்தில் தாய்லாந்து சில காலங்களுக்கு தமிழ்வழி அரசர்களின் ஆட்சியில் இருந்தாகவும் கூறப்படுகிறது. இங்கு கிடைக்கும் கல்வெட்டுக்கள் சில தமிழில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.[1] இரண்டாம் நூற்றாண்டைச் சேர்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டம் ஒன்றும் கண்டெக்கப்பட்டுள்ளது.[2] கிபி 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோயில் தமிழரின் கட்டிட சிற்பக்கலைப் பாணியில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.[3] இங்கு நடக்கும் சடங்குகளில் திருப்பாவை, திருவம்பாவை போன்ற தமிழ் தேவாரங்கள் மந்திரம் போன்று ஓதப்படுகின்றன. தங்கம், கப்பல், பூட்டன் என பல தமிழ்ச் சொற்களும் தாய் மொழியில் உள்ளன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 https://tamilnation.org/conferences/IATR66_Kuala_Lumpur/singaravel.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-07-16. பார்க்கப்பட்ட நாள் 2009-02-18.
  3. http://unarvukal.com/lofiversion/index.php?t1307.html[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்லாந்து_தமிழர்&oldid=3557714" இலிருந்து மீள்விக்கப்பட்டது