தாய் சேய் பாதுகாப்பு திட்டம்

இந்திய அளவில் கர்ப்பிணி தய்மார்களுக்காக பல திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் தாய் சேய் பாதுகாப்பு திட்டம் (JANANI SHISHU SURAKSHA KARYAKRAM) ஆகும். இது ஒரு தேசிய முனைப்பு முயற்சி எனப்படுகிறது. இந்த முனைப்பின் கீழ் அரசு மருத்துவமனையில் பல மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.

ஜனனி சுரக்ச யோஜனா திட்டம் நடைமுறைக்கு வந்தபின் பேறுகாலத்திற்காகப் பெண்கள் மருத்துவமனைகளுக்கும் சுகாதார மையங்களுக்கும் செல்வது அதிகரித்தாலும்கூட அங்கு சென்று தங்கும்போது ஏற்படக்கூடிய உணவு, மருந்து, நோயறிதல் போன்ற இதர செலவுகளை எண்ணி 25% தாய்மார்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்த்தனர். இதைச் சரிசெய்வதற்காக ஜனனி சிசு சுரக்ச காரியகிரமம் (Janani Shishu Suraksha Karyakaram (JSSK)) எனப்படும் புதிய தாய் சேய் பாதுகாப்பு திட்டம் மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தால் ஜூன் 2011 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் தாய்க்கும் சேய்க்கும் குழந்தை பிறந்த 48 மணி நேரத்துள்ளாகத் தேவைப்படும் அனைத்து கவனிப்புகளும் செய்யப்பட்டன.

2014 இல் இத்திட்டமானது, தாய்மார்களுக்குக் கருவுற்ற காலத்திற்கும் குழந்தைப் பேற்றுக்குப் பின்வரும் நாட்களில் ஏற்படும் சிக்கல்களுக்கும், குழந்தைகளுக்குப் பிறந்தவுடனும் பிறந்து ஓராண்டு வரையிலும் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்குப் பொதுச் சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு நீட்டிக்கப்பட்டது.[1][2]

தமிழ்நாட்டில்

தொகு

தமிழ்நாட்டில் இத்திட்டம் செப்டம்பர் 2011 முதல் நடைமுறைக்கு வந்தது. [3]

கர்ப்பிணி தாய்மார்களுக்கு

தொகு
  • இலவச செலவில்லாத பிரசவம்.
  • இலவச அறுவை சிகிச்சை.
  • இலவச மருந்து, நுகர்பொருட்கள்.
  • இலவச இரத்தம், சிறுநீர், அல்ட்ரா சொனாக்ராப்பி மற்றும் பிற சோதனைகள்.
  • இரத்தம் இலவசமாக அளித்தல்.
  • இலவச உணவு (10 நாட்கள்)

குழந்தைகளுக்கு (30 நாட்கள்)

தொகு
  • இலவச மருந்துகள்
  • இலவச பரிசோதனைகள்,இரத்தம் வழங்கல்.
  • இலவச பேருந்து வசதிகள்
  • இலவச சிகிச்சை

பார்வை நூல்

தொகு
  • கர்ப்பிணி தய்மார்களுக்கான கையேடு,தாய் சேய் நலப்பிரிவு,மாநில நலவாழ்வு சங்கம்,தமிழ் நாடு.

மேற்கோள்கள்

தொகு