தாய் வீடு

கன்னடா வில் வெளிவரும் மாத இதழ்

தாய் வீடு கனடாவில் வெளிவரும் தமிழ் மாத இதழ் ஆகும். வீடு தொடர்பான பல தகவல்களை இது தாங்கி வருகிறது. வீடு விற்பனைத் தொழிலில் உள்ள பலர் இதில் பந்தி எழுத்துகிறார்கள். அதே போல சம அளவான பக்கங்களில், சமகால அரசியல், வாழ்வியல், இலக்கியம், கலை சம்பந்தமான கட்டுரைகளும், சிறுகதைகளும் வெளி வருகின்றன. கனடாவின் முன்னணி எழுத்தாளர்களான அ. முத்துலிங்கம், தேவகாந்தன், குரு அரவிந்தன், பொ.கனகசபாபதி, கவிஞர் கந்தவனம், என்.கே.மகாலிங்கம், கவிஞர் சேரன், கே.எஸ்.பாலச்சந்திரன், மாமூலன், குலேந்திரன், துருவசங்கரி போன்றோரும் இந்த இதழில் தொடராக எழுதி வருகின்றனர். "ஆழ்த்து முத்துக்கள்" என்ற தலைப்பில் ஒவ்வொரு இதழிலும் பழ்ம்பெரும் கலைஞர்கள் பற்றிய அறிமுகம் இடம் பெறுகின்றது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_வீடு&oldid=620899" இலிருந்து மீள்விக்கப்பட்டது