தாராசுரம் சக்கராயி அம்மன் கோயில்
தாராசுரம் சக்கராயி அம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரம் வட்டம் எலுமிச்சங்காபாளையத்தில் கீழப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.
மூலவர்
தொகுமூலவராக சக்கராயி அம்மன் உள்ளார். மூலவர் உருவத்திருமேனி தேவியின் வழிபாட்டில் தாய்மையின் வடிவமாகப் போற்றப்படுவதாகும்.
அமைப்பு
தொகுகோயில்
தொகுஇக்கோயில் முகமண்டபம், கருவறை, விமானம் போன்ற அமைப்புகளுடன் காணப்படுகிறது. சன்னதியின் வலப்புறம் நந்தன விநாயகர், பைரவர், தட்சிணாமூர்த்தி, திருமுகலட்சுமி, மருத்துவமாரி ஆகியோர் உள்ளனர். மகாவிஷ்ணுபாதமும் திரிசூலமும் இப்பகுதியில் காணப்படுகின்றன. இடது புறம் மாரியம்மன், விநாயகர், அய்யனார், நந்தனகாளி, வீரபத்திரர் காணப்படுகின்றனர்.
மூலவர்
தொகுபொ.ஆ.12ஆம் நூற்றாண்டிற்குரிய பெண் தெய்வச் சிற்பம் இப்பகுதிகளில் தோனறிய தாந்தரிக வழிபாட்டைக் காட்டுகிறது. இச்சிற்பம் இரு கைகளுடன் நிர்வாணமாகக் குத்திட்டு அமர்ந்த நிலையில் உள்ளது. மலர்ந்த தாமரையைத் தலையாகக் கொண்டுள்ளது. யோனி வழிபாட்டிற்காக அமைந்த இந்த உருவம் மகாராட்டிரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் உள்ளது. அங்கிருந்து இது தமிழ்நாட்டிற்கு சோழர் காலத்தில் வந்தது. இதன் மார்பகங்கள் உயிர்களின் வளர்ச்சி நிலையையும், பிறப்புறுப்பு வாழ்வின் வளமையையும் தொடர்ச்சியையும் காட்டுகிறது. இப்பெண் தெய்வத்தின் ஆதிமூலம் சிந்துவெளி நாகரிகத்துத் தரைப்பெண் என்று கருதுகின்றனர். [1]
குடமுழுக்கு
தொகுஇக்கோயிலின் குடமுழுக்கு சூன் 2013இல் நடைபெற்றது. [2]
கும்பகோணம் சக்கராயி அம்மன் கோயில்
தொகுகும்பகோணம் நகரில் ஒரு சக்கராயி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, தமிழ்நாட்டு வரலாறு- சோழப்பெருவேந்தர் காலம் (கி.பி.900-1300), இரண்டாம் பகுதி, தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை, 1998, ப.591
- ↑ தாராசுரம் ஸ்ரீசக்கராயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், தினமணி, 21.6.2013