தாராதத் கெய்ரோலா

நவீன கர்வாலி கவிதையின் முன்னோடி

தாரா தத்  கெய்ரோலா (1875-1940), ஒரு இந்திய வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் நவீன கர்வாலி கவிதையின் முன்னோடியாக அறியப்படுகிறார் மேலும் குறிப்பாக கர்வால், உத்தரகண்ட் போன்ற பகுதிகளில் வழங்கப்படும் இந்திய நாட்டுப்புறக் கதைகளுக்கு அவர் செய்த பங்களிப்புக்காக, நினைவுகூறப்படுகிறார்

தாரா தத்  கெய்ரோலா
तारा दत्त गैरोला
தாய்மொழியில் பெயர்तारा दत्त गैरोला
பிறப்பு6 ஜூன் 1875
தேஹ்ரி கர்வால்
இறப்பு28 மே 1940
பணிவழக்கறிஞர், எழுத்தாளர் , உரை திருத்துனர்
அறியப்படுவதுகிராமிய கவிதைகள் மற்றும் பாடல்கள் ஆய்வாளர்

வாழ்கை வரலாறு

தொகு

1875 இல் தெஹ்ரி கர்வால் சமஸ்தானத்தில் உள்ள பட்டி பதியார் கர் என்ற பகுதியில் உள்ள தால் டங் கிராமத்தில் பிறந்த தாரா தத் கெய்ரோலா, டேராடூன் மற்றும் ஸ்ரீநகரில் வழக்கறிஞர் தொழிலை நீண்ட காலமாகவும் ஆக்கப்பூர்வமான முறையிலும் செய்து கொண்டிருந்தார். 'கர்வாலி' என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில், உத்தரகாண்டின் உள்ளூர் கலைஞர்களான 'ஹுர்கியாஸ்' என்பவர்களால் பாடப்படும் நாட்டுப்புற வீர பாடல்களையும், கவிதைகளையும் பக்திப் பாடல்களையும் சேகரித்தார். அவற்றையெல்லாம் தொகுத்து  இ. ஷெர்மன் ஓக்லேயுடன் இணைந்து இமயமலை நாட்டுப்புறக் கதைகள் என்ற பெயரில் இணை ஆசிரியராக இருந்து வெளியிட்டார். [1] இந்த புத்தகம் கர்வாலி மற்றும் குமாவோனி நாட்டுப்புற வீர கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை 'வீர்கதா' என்று தொகுக்கிறது. பெனாரஸ் சிட்டி: தி இந்தியன் புக் ஷாப், தியோசோபிகல் சொசைட்டி, (1929) இல் வெளியிடப்பட்ட 'தாதுவின் பாடல்கள்' என்ற புத்தகம் தாரா தத் கெய்ரோலாவின் அறிமுகம் மற்றும் அன்னி பெசன்ட்டின் முன்னுரையுடன்வெளியானது. அவரது பங்களிப்பை இதன் மூலமும் அறியலாம்.

கெய்ரோலா ஒரு கர்வாலி கவிஞராக இருந்தாலும், பல்வேறு நவீன கர்வாலி கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பைக் கொண்ட முதல் கர்வாலி கவிதைத் தொகுப்பான 'கர்வாலி கவிதாவலி'யை திருத்தவும் செய்துள்ளார். மேலும்  கர்வாலி நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்டதும், தாரா தத் கெய்ரோலாவின் சொந்த கர்வாலி கவிதைகள் அடங்கியதுமான   'சடேய்' (सदेई) என்ற புத்தகத்தையும்  அவர் வெளியிட்டுள்ளார்,

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Fiol, Stefan (2017). Recasting Folk in the Himalayas: Indian Music, Media, and Social Mobility. Unervisty of Illinois Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராதத்_கெய்ரோலா&oldid=3661895" இலிருந்து மீள்விக்கப்பட்டது