தாராபாத்திரம்
தாராபாத்திரம் என்பது சிவாலயங்களில் மூலவருக்கு மேல் தொங்கவிடப்படுகின்ற குடம் போன்ற பாத்திரமாகும். இப்பாத்திரம் குவிந்த அடிப்பாகமுடையது. இதில் தண்ணீர் அல்லது பால் நிரப்பி மூலவரான சிவலிங்கத்தின் மீது சிறிய துளிகளாக விழும்படி செய்யப்படுகிறது. இவ்வாறான அபிசேகத்திற்கு தாராபிசேகம் என்று பெயர். [1]
அக்னி நட்சத்திர காலங்களில் இவ்வபிசேகம் சிவாலயங்களில் இரவும் பகலும் தொடர்ந்து செய்யப்பெறுகிறது.[2]