தாரா ராணி சிறீவசுதவா

இந்திய விடுதலைப் போராட்டப் பீகாரி

தாரா ராணி சிறீவசுதவா (Tara Rani Srivastava)  என்பவர் இந்திய விடுதலைப் பெண் போராளி ஆவார். மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டவர்.

பிகார் மாநிலத்தில் சரன் மாவட்டத்தில் தம் கணவர் புலந்து பாபு என்பவருடன் வாழ்ந்து வந்தார். விடுதலை போராட்ட வேட்கையினால் உந்தப்பட்டு  தம் கணவருடன் காவல் நிலையம் நோக்கிக் கொடி ஏற்றுவதற்கு  ஊர்வலமாகச்  சென்றபோது, காவலரால் இவருடைய கணவர் சுடப்பட்டார்.  தமது சேலைத் துணியால் கணவரின் காயத்தில் கட்டுப் போட்டார். அப்படி கணவர் சுடப்பட்டநிலையிலும் தம்முடை ய  நடையை நிறுத்தாமல் தொடர்ந்தார். இவருடைய கணவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைப் பின்னரே அறிந்தார். இந்தியா 1947 ஆகத்து 15 இல் விடுதலை பெறும் வரை போராட்டங்களில் கலந்து கொண்டார்.[1]

மேற்கோள் தொகு

  1. Shukla, Vivekananda (1989). Rebellion of 1942: Quit India movement. H.K. Publishers & Distributors. பக். 63–64. https://books.google.co.in/books?id=T-EtAAAAMAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_ராணி_சிறீவசுதவா&oldid=3326727" இலிருந்து மீள்விக்கப்பட்டது