தாரா வாத்து

ஒருவகை வாத்து

தாரா வாத்து என்பது ஒரு நீர் வாழ் பறவை இனமாகும். இது அனடிடே (Anatidae) குடும்பத்தைச் சேர்ந்தது. இவ்வகை பறவை இனங்கள் அன்செர் (Anser) என்னும் சாம்பல் நிற வாத்து மற்றும் பிரண்டா (Branta) என்னும் கருப்பு நிற வாத்து இரண்டையும் உள்ளடிக்கியது . சென் (Chen) எனப்படும் 'வெள்ளை வாத்து பேரினம் சில நேரங்களில் அன்செர் இனத்தின் உள்ளிடாக வைக்கப்படுகிறது . மேலும், ஷேல்டக்ஸ் (shelducks) எனும் சில பறவைகள் தங்கள் பெயருடன் "வாத்து" என்பதையும் பெயராக கொண்டுள்ளது. மேலும், சற்று தொடர்புடைய இனமான அனடிடே (Anatidae) குடும்பம் வாத்துக்கள் என்றே அறியப்படுகிறது. அவைகள் இயல்பான வாத்துக்களின் உருவை விட சற்றே பெரிதாக, ஒரு சில சிரியனவாக காணப்படுகிறது.

சொற்பகுப்பு

தொகு

"வாத்து" (goose)என்ற சொல் பொதுவாக பெண் வாத்துக்களை குறிக்கவும், 'gander' என்னும் சொல் ஆண் வாத்துக்களையும் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. முழுமையான வளர்ச்சியடையாத இளம் பறவைகள் கோஸ்லிங்க்ஸ் (goslings) என்று அழைக்கபடுகின்றன . வாத்துக்களின் ஒரு குழுவிற்கான கூட்டு பெயர்ச்சொல் கக்லே (gaggle) அவைகள் குழுவாக பறக்கும்போது ஒரு ஸ்கின் (skein), (அ) ஒரு வெட்ச் (wedge) ; ஒட்டி பறக்கும்போது ப்ளம்ப் (plump) என்றும் அழைக்கப்படுகிறது.

வாத்துக்களின் முன்னோடி

தொகு

மூன்று வகையான வாத்துக்கள் உள்ளன. அவையாவன: அன்சர், சாம்பல் வாத்து, கிரேலாக் வாத்து மற்றும் உள்நாட்டு வாத்துகள் ஆகும்.

வாத்துக்களின் இரண்டு வகைகள் அன்செரினாவில் உள்ளன; அவற்றின் முந்தைய தலைமுறைகளாவன செல்போஸ்ஸர், கேப் பரான் வாஸ், மற்றும் நியூமேலீஸின் முன்னோடியான நியூசிலாந்தின் கூனிமோர்னிஸ் ஆகியவைகள் இருக்கலாம்.

உண்மையான வாத்துக்களின் பேரினம் பற்றிய புதைபடிவங்கள் கடினமாக உள்ளது; குறிப்பாக, வட அமெரிக்காவின் புதைபடிவப் பதிவு மற்றும் 10மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த வாத்துக்கள் பற்றிய மிசோனில் இருந்து வந்திருக்கும் ஆய்வு ஆவணங்களை தெளிவாகவும், விரிவாகவும் ஆவணப்படுத்தியுள்ளது.மேலும் சில படிவங்கள் வாத்து போன்ற பறவைகள் ஹவாய் தீவுகளில் காணப்படும் துணைப் பாறைகளில் இருந்து அறியப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_வாத்து&oldid=3940569" இலிருந்து மீள்விக்கப்பட்டது