தாரி மொழி ஆப்கானிஸ்தானில் பேசப்படும் பாரசீக மொழி வடிவின் ஒரு மாறுபாடு ஆகும். ஆப்கானிஸ்தான் அரசால் 1964 ஆம் ஆண்டில் அந்நாட்டில் பேசப்படும் பாரசீக மொழிக்கு தாரி மொழி என பெயரிடப்பட்டது. [1]இதனால் இம்மொழி ஆப்கானிய பாரசீக மொழி எனவும் அழைக்கப்படுகிறது. தாரி மொழி ஆப்கானிஸ்தானின் ஓர் அதிகாரப்பூர்வமான ஆட்சி மொழியாகும். ஆப்கானிஸ்தானில் பாரசீக மொழி பேசுவோர் இம்மொழியை "ஃபார்சீ" என அழைக்கின்றனர்.இவர்கள் தாரி மொழி எனும் பெயர் பாஷ்டூன் எனும் சமுகத்தினரால் அவர்கள் மீது திணிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. http://aboutworldlanguages.com/dari
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரி_மொழி&oldid=2613946" இலிருந்து மீள்விக்கப்பட்டது