தார்பார்கர் மாடு

தார்பார்கர் மாடு (இந்தி:थारपारकर) (வெள்ளை சிந்தி, குட்சுரி, தாரி என்றும் அறியப்படுகின்றன) [1] என்னும் மாடுகள் தற்போதைய பாக்கிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தர்பார்கர் மாவட்டத்தில் காணப்படும் ஒரு மாட்டு இனம். [2] இது அதன் பால் கறவைத்திறன் மற்றும் உழைப்புத் திறன் ஆகிய இரட்டை பலன்களுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் பெயர் அதன் வழக்கமான வாழ்விடம் மற்றும் பிறப்பிடமான இராஜஸ்தானின் தார் பாலைவனத்தின் அருகில் உள்ள தார்பாகார்கர் பகுதியின் பெரில் இருந்து வந்த‍து. இந்த மாடுகள் நடுத்தர அளவு முதல் பெரிய அளவு வரை இருக்கின்றன. இதன் தோல் நிறம் சாம்பல் வெள்ளை நிறத்தில் இருக்கும். [3] இவை நீண்ட முகமும், நீண்ட வால், சிறிய கால், நடுத்தரமான கொம்புகள் கொண்டவை. இவை வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இனமாகும். இந்த மாடுகள் குறைந்தது ஐந்து முதல் ஆறு லிட்டர்வரை பால் தரக்கூடியது. இதன் பால் கெட்டியானதாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.[4] இந்திய மாட்டினங்கள் அழியாமல் பாதுகாக்கும் வகையில் தேசிய கால்நடை அபிவிருத்தி திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ராஜஸ்தான் மாநில தார்பார்க்கர் மாடுகளை இன விருத்தி செய்யும் பணியை செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணைக்கு ஒதுக்கி உள்ளது. போதிய நீராதாரத்துடன் 1,500 ஏக்கர் பரப்பளவு உள்ள இப்பண்ணையில் தார்பார்க்கர் மாடுகள் ராஜஸ்தானில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு இனவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.[5]

தார்பார்கர் காளை
தார்பார்கர் பசு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.dairyknowledge.in/article/tharparkar
  2. "Tharparkar Cattle". Ansi.okstate.edu. பார்க்கப்பட்ட நாள் 2009-12-11.
  3. "Tharparkar Cattle". Department of Animal Husbandry, Government of India.
  4. சுப. ஜனநாயகச்செல்வம் (8 சூலை 2015). "செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணையில் ராஜஸ்தான் தார்பார்கர் இன பசுமாடுகள்: விவசாயிகள் வரவேற்பு". செய்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 9 மே 2019.
  5. "ராஜஸ்தானில் பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட தார்பார்க்கர் இன பசுக்கள் செட்டிநாடு பண்ணைக்கு வந்தன". செய்தி. தி இந்து. 19 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்பார்கர்_மாடு&oldid=3577462" இலிருந்து மீள்விக்கப்பட்டது