தாறுபாய்ச்சிக் கட்டுதல்

தாறுபாய்ச்சிக் கட்டுதல் என்பது தமிழர்களின் வேட்டி உடுத்தும் முறைகளில் ஒன்று ஆகும்.

பழங் காலத்தில் தமிழ் நாட்டில் வேட்டைக்காரர்கள், போர் செய்யும் மறவர்கள், நடனம் ஆடுவோர் போன்றவர்கள் தாறுபாய்ச்சிக் கட்டி வேலை செய்தார்கள். அந்தக் காலத்தில் கால் சட்டையோ சல்லடமோ வழக்கத்தில் இல்லை. வேட்டியை இடுப்பில் சுற்றிக் கட்டுவதால் கடுமையான வேலை செய்யும்போதும் நடக்கும் போதும் கால் தட்டும் அல்லது தடுக்கும். சில நேரம் கட்டிய துணி கிழியும். எனவே கடுமையாக உடல் உழைப்பு செய்பவர்கள் தாறுபாய்ச்சிக் கட்டி வேட்டி உடுத்தி வந்தார்கள்.

தாறு பாய்ச்சிக் கட்டுதல் மூன்று பெயர்களால் வழங்கப்படுகிறது. அவை மொட்டைத்தாறு, வட்டத்தாறு, வால்தாறு ஆகும். கட்டுகிற முறையிலும் சிறு வேறுபாடுகள் உண்டு.

தாறுபாய்ச்சிக் கட்டுதல் என்பதை தற்றுடுத்தல் எனவும் அழைக்கிறார்கள். இத்தகைய வேட்டி கட்டும் முறை தொல்தமிழரின் வழக்கம் ஆகும்.

சான்றாவணம் தொகு

தமிழியற் கட்டுரைகள், ஆசிரியர்-ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்மண் பதிப்பகம், தியாகராய நகர், சென்னை.