தாலத்து (அளவீடு)

பண்டைய அளவீடு

தாலத்து (Talent) என்பது மெசபடோமியாவில் கிமு 4 ஆம் ஆயிரமாண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு எடை அலகு ஆகும். இந்த அளவீடானது 3 ஆம் ஆயிரமாண்டின் இறுதியில் அக்காடியன்-சுமர் காலக் கட்டத்தின் போது 60 மினாக்கள் அல்லது 360 ஷெக்கல்களாக (தோராயமாக 11 கிராம் வெள்ளி நாணயம்) பிரிக்கப்பட்டது. செவ்வியல் பழங்காலத்தில், தாலத்து ( இலத்தீன்: talentum , பண்டைய கிரேக்கத்தில் இருந்து : τάλαντον , talanton "அளவு, இருப்பு, தொகை") வணிக பரிவர்த்தனைகளுக்கான பொதுவான எடை அலகுகளில் மிகவும் பெரியது ஆகும். ஒரு அட்டிக்கா தாலத்து தோராயமாக 26.0 கிரோகிராம்கள் (57 பவுண்ட் 5 அவுன்ஸ்). [1] கொண்டது. ஒரு பாபிலோனிய தாலத்து 30.2 கிலோ (66 பவுண்ட் 9 அவுன்ஸ்). கொண்டது. [2] பண்டைய இஸ்ரேல் பாபிலோனிய நிரையான தாலத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் பின்னர் அதை திருத்தியமைத்துக்கொண்டது. [3] புதிய ஏற்பாடு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொதுவான தாலத்து 58.9 கிலோ (129 பவுண்ட் 14 அவுன்ஸ்) ஆகும். [3] ஒரு ரோமானிய தாலத்து (100 லபிரிகளாக பிரிக்கப்பட்டது) 1+1⁄3 அட்டிக் தாலத்துகள், தோராயமாக 32.3 கிலோ (71 பவுண்ட் 3 அவுன்ஸ்); ஒரு எகிப்திய தாலத்து 80 லபிரி, [1] தோராயமாக 27 கிலோ (60 பவுண்டு) ஆகும். [1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 John William Humphrey, John Peter Oleson, Andrew Neil Sherwood, Greek and Roman technology, p. 487.
  2. Herodotus, Robin Waterfield and Carolyn Dewald, The Histories (1998), p. 593.
  3. 3.0 3.1 "III. Measures of Weight:", Jewish Encyclopedia.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலத்து_(அளவீடு)&oldid=3401012" இலிருந்து மீள்விக்கப்பட்டது