தாளத்திரயம்
தாளத்திரயம் என்பது சைவ சமயத்தில் சூரிய வழிபாட்டின் பொழுதும் (சந்தியா வந்தனம்), சிவாலயங்களின் நிர்மால்ய அதிகாரியான சண்டேசுவரை வணங்கும் பொழுதும் பக்தர்களால் செய்யப்படுகின்ற ஒரு வகை பூஜை தாள முறையாகும். இம்முறையில் இடதுகையின் உள்ளங்கையில் வலது கையின் நடு மூன்று விரல்களைக் கொண்டு மெல்லியதாக தட்டுவதாகும். சண்டேசுவரை வணங்கும் முறையில் இந்த தாளத்திரயம் மறுவி சொடுக்கிடுவதும், கை கொட்டுவதும் செய்யப்படுகிறது. இத்தகைய செயல்கள், அறிந்தவர்களால் கடுமையாக எதிர்க்கப்படுகின்றன.