தாழை

(தாழம்பூ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாழை மலர்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Pandanales
குடும்பம்:
Pandanaceae
பேரினம்:
இனம்:
P. fascicularis
இருசொற் பெயரீடு
Pandanus fascicularis
லாம்.
வேறு பெயர்கள்

Pandanus odoratissimus, லின்.

தாழை மலர் (Pandanus fascicularis) தற்காலத்தில் தாழம்பூ என அழைக்கப்படுகிறது. நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.

கைதை என்னும் மலரும் இதன் இனம். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம்.

சங்க காலம்

தொகு

சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தாழை [1] கைதை [2] ஆகிய இரு மலர்களும் இடம்பெற்றுள்ளன.

பழங்குறிப்புகள்
  • தாழையின் மடல் பெரியது [3]
  • இளமையில் வாழைத்தண்டு போன்று இருக்கும் மகளிர் குறங்கு(மால்-தொடை) முதுமையில் தாழை மரத்துத் தண்டு போல மாறிவிடுமாம். [4]

பயன்பாடுகள்

தொகு

தாழைமர இலைகளை மடல் என்பர். தாழைமடல்களைக் கொண்டு குடை செய்வர். தலையில் தொப்பி போலப் போட்டுக்கொள்ளும் குடையாகவும், மழைக்குக் கையால் பிடித்துக்கொள்ளும் குடையாகவும் இது தைக்கப்படும். இதன் வாசனைக்காக இதனை உணவில் சேர்ப்பார்கள்.[5]  

மேலும் காண்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 83)
  2. குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 80)
  3. மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம் – நீதிநூல் பாடிய ஔவையார்
  4. மணிமேகலை 20-62
  5. Kewda essence
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாழை&oldid=3118888" இலிருந்து மீள்விக்கப்பட்டது