தாழிசை (பாவகை)

பாவகைகளில் தாழிசை என்பது கலிப்பாவில் வரும் இரண்டாவது உறுப்பைக் குறிக்கும். தாழ்ந்து ஒலிப்பத

பாவகைகளில் தாழிசை என்பது கலிப்பாவில் வரும் இரண்டாவது உறுப்பைக் குறிக்கும். தாழ்ந்து ஒலிப்பதனால் தாழிசை என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கலிப்பாவில் பொதுவாக இது முதல் உறுப்பான தரவைத் தொடர்ந்து வரும். இதற்கு இடைநிலைப்பாட்டு என்ற மற்றொரு பெயரும் உண்டு. கலிப்பாவில் பொதுவாக மூன்று அல்லது ஆறு தாழிசைகள் இருப்பது வழக்கம். பன்னிரண்டு தாழிசைகள் கொண்ட கலிப்பாக்களும் உள்ளன.

தாழிசை இரண்டு தொடக்கம் நான்கு அடிகளைக் கொண்டிருக்கலாம். எனினும் இவ்வெண்ணிக்கை தரவிலுள்ள அடிகளின் எண்ணிக்கையிலும் குறைவாக இருக்க வேண்டும் என்பது என்பது விதி.

எடுத்துக்காட்டுகள்

தொகு

குமரகுருபரர் இயற்றிய சிதம்பரச் செய்யுட்கோவையில் காணப்படும் கலிப்பாப் பகுதியின் தாழிசைகளைக் கீழே காணலாம். இதன் தரவு மூன்று அடிகளைக் கொண்டது இதனால் அதனிலும் குறைவான எண்ணிக்கையில் அடிகள் அமையவேண்டும் என்பதால் தாழிசை ஒவ்வொன்றும் இரண்டு அடிகளைக் கொண்டு அமைந்துள்ளன. இங்கே மூன்று தாழிசைகள் உள்ளன.


முருகுயிர்க்கு நறுந்தெரியன் மொய்குழலின் மையுண்கட்
பொருகயற்குன் றிருமேனி புதுவெள்ளப் புணரியே
தேன்மறிக்கும் வெறித்தொங்கலறற் கூந்தற்றிருந் திழைகண்
மான்மறிக்குன் றிருமேனி மலர்முல்லைப் புறவமே.
பிறையளிக்குஞ் சிறுநுதலப் பெண்ணமுதின் பேரமர்க்கட்
சிறையளிக்குன் றிருமேனி தேனளிக்கும் பொதும்பரே.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாழிசை_(பாவகை)&oldid=3299319" இலிருந்து மீள்விக்கப்பட்டது