தாழ்சுழற்சி
தாழ்சுழற்சி, என்பது கழிவுப் பொருட்களை அல்லது தேவையற்ற உற்பத்திப் பொருட்களை முன்னதிலும் தரம்குறைந்த அல்லது குறைந்த செயற்பாட்டுத்திறன் கொண்ட புதிய பொருட்களாகவோ உற்பத்திப் பொருட்களாகவோ மாற்றுவதைக் குறிக்கும். இது ஒருவகை மறுசுழற்சி ஆகும். தாழ்சுழற்சியின் நோக்கம் அடிப்படையில் பொருட்கள் கழிவுகளாக வீசப்படுவதைத் தடுத்தல், தேவைகளுக்காகப் புதிதாக மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைத்தல், ஆற்றல் பயன்பாட்டைக் குறைத்தல், வளி மாசடைவதைக் குறைத்தல், பசுங்குடில் வளிமங்கள் வெளிவிடப்படுவதைக் குறைத்தல் என்பனவாகும். சிலவகை நெகிழிப் பொருட்கள் தரம் குறைவான நெகிழிப்பொருட்களாக மறுசுழற்சியடைதல் தாழ்சுழற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
இயல்புகள்
தொகுதாழ்சுழற்சியின் இயல்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
- குறைந்த மீள்பயன்பாடு.
- மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய மறுசுழற்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருத்தல்.
- ஒவ்வொரு முறை தாழ்சுழற்சியின்போதும்,
- தரம் குறைந்து செல்லும்.
- பெறுமானம் குறைவடைகிறது.
- தரநிலையும், எதிர்பார்ப்பு மட்டமும் குறைந்து செல்லும்.
- இறுதி மறுசுழற்சிக்குப்பின் தரம் கழிவு நிலைக்குத் தாழ்ந்துவிடும்.
எடுத்துக்காட்டுகள்
தொகு- அலுவலகத் தாள் கழிவுகளைக் கழிப்பறைத் தாள்களாக மறுசுழற்சி செய்தல்.
- எறியத்தக்க மின்கலங்களை கூடிய வலுத் தேவைப்படும் கருவிகளிலிருந்து குறைந்த வலுத்தேவைப்படும் கருவிகளுக்கு மாற்றுதல்.
- பழைய துவாலைகளைச் சுத்தம் செய்வதற்கான துணிகளாகப் பயன்படுத்துதல்.
- வழக்கற்றுப் போன தொழில்நுட்பக் கருவிகளை மாற்றுத் தேவைகளுக்குப் பயன்படுத்தல். எடுத்துக்காட்டாக பழைய கணினிகளை பாட்டுக் கேட்பதற்குப் பயன்படுத்தல்.
- உடந்த செங்கற்களை காங்கிறீட்டுத் தயாரிப்பின்போது சரளைக் கற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தல்.