தாவுத் அலி மிர்சா
தாவுத் அலி மிர்சா (Dawood Ali Mirza - பிறப்பு 23 செப்டம்பர் 1907 இறப்பு 21 ஆகஸ்ட் 1986), இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். மாநிலங்களவை உறுப்பினராக சென்னை மாகாணம் சார்பாக 1956 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவையில் பணியாற்றியுள்ளார்.
பிறப்பும் கல்வியும்
தொகுதாவுத் அலி மிர்சா 23 செப்டம்பர் 1907 இல் நவாப் ரசா அலி கான் பகதூரின் மகனாக அன்றைய சென்னை மாகாணத்தின் மசூலிப்பட்டிணத்தில் பிறந்தார். பி.ஏ படித்துள்ள இவர் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
அரசியல்
தொகுஇந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் 11-12-1956 முதல் 2-4-1962 வரை மாநிலங்களவையில், தோ்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.[1]
குடும்பம்
தொகுதாவுத்திற்க்கு ருக்கையா மிர்சா என்கிற ஷா பேகம் என்ற மனைவி உள்ளார்.[2]
இறப்பு
தொகுதாவுத் 21 ஆகஸ்ட் 1986 அன்று உயிரிழந்தார்.