தாவ்சோனைட்டு

சோடியம் அலுமினியம் கார்பனேட்டு ஐதராக்சைடு கனிமம்

தாவ்சோனைட்டு (Dawsonite) என்பது NaAlCO3(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சோடியம் அலுமினியம் கார்பனேட்டு ஐதராக்சைடு ஆகியவற்றால் ஆன ஒரு கனிமமாகும். நேர்ச்சாய்சதுரக் கட்டமைப்பில் இது படிகமாகிறது.[2] இது தாதுவுக்காக வெட்டப்படவில்லை. 1874 ஆம் ஆண்டில் கனடாவின் மாண்ட்ரீல் தீவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழக வளாகத்தில் ரெட்பாத் அருங்காட்சியகத்தின் கட்டுமானத்தின் போது பெல்ட்சுபாரைக் கொண்டிருந்த ஒருபாறையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. புவியியலாளர் சர் இயான் வில்லியம் தாவ்சன் (1820-1899) நினைவாக தாவ்சோனைட்டு எனப் பெயரிடப்பட்டது.

தாவ்சோனைட்டு
Dawsonite
கனடாவின் கியூபெக்கில் கிடைத்த தாவ்சோனைட்டு
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNaAlCO3(OH)2
இனங்காணல்
மோலார் நிறை144.00 கி/மோல்
நிறம்வெண்மை
படிக இயல்புஆரம் அல்லது தகடு
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரப் படிகங்கள்
பிளப்புசரிபிளவு {110} இல்
முறிவுசமமற்றது
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுபளபளக்கும்
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி2.436
ஒளிவிலகல் எண்nα = 1.466
nβ = 1.542
nγ = 1.596
இரட்டை ஒளிவிலகல்δ = 0.130
2V கோணம்77°
மேற்கோள்கள்[1]

இந்த வகை கனிமம் ரெட்பாத் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் பாதுகாக்கப்படுகிறது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் தாவ்சோனைட்டு கனிமத்தை Dws[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Dawsonite". mindat.org/. https://www.mindat.org/min-1240.html. பார்த்த நாள்: 8 November 2024. 
  2. "Dawsonite". sciencedirect.com. https://www.sciencedirect.com/topics/earth-and-planetary-sciences/dawsonite. பார்த்த நாள்: 8 November 2024. 
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவ்சோனைட்டு&oldid=4138330" இலிருந்து மீள்விக்கப்பட்டது