தா. பாலகணேசன்

தா. பாலகணேசன் (பிறப்பு ஆகஸ்ட் 24, 1963) பிரான்சில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளர் ஆவார். கவிதை மற்றும் அரங்கியல் துறைகளில் ஈடுபாடு கொண்டவர். எழுதுவதோடு நின்று விடாது நடிப்பதிலும் ஏனைய அரங்கியற் செயற்பாடுகளிலும் ஈடுபடுபவர். "தமிழர் நிகழ் கலைக் கூடம் - பிரான்ஸ்" அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவர்.

இவரது நூல்கள்தொகு

  • விடிவிற்கு முந்திய மரணங்கள் - ஈழத்தில் வெளிவந்த முதலாவது இராணுவத் தாக்குதல் பற்றிய புதினமாக இது கருதப்படுகிறது.
  • வர்ணங்கள் கரைந்த வெளி (2004) கவிதைத் தொகுதி
  • பண் உடைந்துபோன கடலாள் (2010) கவிதைத் தொகுதி

வெளியிணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._பாலகணேசன்&oldid=2714645" இருந்து மீள்விக்கப்பட்டது