திகாலிபுகுரி
திகாலிபுகுரி (Dighalipukhuri) இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள குவகாத்தி நகரில் வெட்டப்பட்டுள்ள செவ்வக வடிவ செயற்கை குளமாகும். [1][2] இதை திகலிபுகுரி என்ற பெயராலும் அழைக்கலாம். இக்குளம் அரை மைல் நீளம் கொண்டுள்ளது. இங்குள்ள தோட்டமும் குளமும் சேர்ந்து 17-18 பிகா அளவு நிலப்பகுதியாகும். ஒரு பிகா என்பது ஓர் ஏக்கரில் மூன்றில் ஒரு பகுதியுள்ள நிலப்பரப்பைக் குறிக்கிறது.
வரலாறு
தொகுவரலாற்றில் இது அகோம் இனக்குழுவினரால் ஒரு கடற்படை தளமாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பிரம்மபுத்திரா நதிக்கு இக்குளத்தின் வழியாகச் செல்லும் வழி இறுதியில் மூடப்பட்டது, காலனித்துவ காலத்தில் இந்த பகுதி மேலும் நிரப்பப்பட்டு இங்கு சுற்றுலா மாளிகை கட்டப்பட்டது. பின்னர் குவகாத்தி உயர் நீதிமன்ற கட்டடமும் புதிதாக நிரப்பப்பட்ட பகுதியில் கட்டப்பட்டது.
பார்வை நேரம்
தொகுதிகால் புகுரி பூங்கா காலை 8:30 மு.ப முதல் 5.30 பி.ப வரை திற்ந்திருக்கும்.