திகியா

பேர்பர் போர்வீராங்கனை

திகியா (Dihya) அல்லது ககினா என்பவர் ஒரு பேர்பர் போர்வீராங்கனை ராணியாகவும் மற்றும் ஒரு மத மற்றும் இராணுவத் தலைவராக இருந்தார். இவர் மாக்ரெப் பகுதியை முஸ்லீம்கள் கைப்பற்றுவதை எதிர்த்து ஒரு போரை வழிநடத்தினார். அப்போதைய பகுதி நுமிடியா என்று அழைக்கப்பட்டது. இவர் 7ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்தார். 7 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நவீன அல்ஜீரியாவில் இறந்தார்.

திகியா
அல்சீரியாவின் கெஞ்செலாவில் உள்ள திகியா நினைவுச்சின்னம்
ஆட்சிஏழாம் நூற்றாண்டின் ஆரம்பம்
இறப்பு703 CE
பிஸ்கரா
அடக்கம்கென்ச்சலா

தோற்றம்

தொகு

இவருடைய பெயர் பலவிதங்களில் அறியப்படுகிறது: தயா, தெகியா, திகியா, தக்யா அல்லது தம்யா. [1] இவரது பட்டத்து அல்-ககினா என அரபு மொழி ஆதாரங்கள் மேற்கோள் காட்டுகிறது. இது இவரது முஸ்லீம் எதிரிகளால் வழங்கப்பட்ட புனைப்பெயராகும். ஏனெனில் இவர் எதிர்காலத்தை முன்னறிவிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. இவர் 7ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெராவா ஜெனாட்டா பழங்குடியினரில் பிறந்தார். [2] இவர் ஆரசு மலைகள் முதல் கடேம்சின் சோலை வரை ஒரு ஐந்து ஆண்டுகள் சுதந்திரமாக பெர்பர் அரசை ஆட்சி செய்தார். ஆனால் மூசா பின் நுசாயர் கட்டளையிட்ட அரேபியர்கள் பலமான படையுடன் வந்து இவரைத் தோற்கடித்தனர். இவர் நவீன கால நகரமான துனிசியாவின் எல் ஜெமின் ஆம்பி அரங்கத்தினருகே எதிர்த்து போரிட்டார். ( இது யுனெஸ்கோவால் 1979 முதல் உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது ) ஆனால் இறுதியாக ஒரு கிணற்றின் அருகே போரில் கொல்லப்பட்டார். அந்தக் கிணறு ஆரஸில் உள்ள பிர் அல் ககினா என்ற இவரது பெயரை இன்றும் கொண்டுள்ளது . [3]

மதம்

தொகு

19ஆம் நூற்றாண்டின் கணக்குகள், இவர் யூத மதத்தைச் சேர்ந்தவர் அல்லது இவரது பூர்வீகம்பழங்குடியினரான யூதமயமாக்கப்பட்ட பேர்பர்கள் என்று கூறுகின்றன. [4] அல்-மாலிக் என்பவரின் கூற்றுப்படி, அவர் தனது பயணங்களில் ஒரு "சிலை" உடன் இருந்தார். முகமது தல்பி மற்றும் கேப்ரியல் கேம்ப்ஸ் ஆகிய இருவரும் இந்த விக்கிரகத்தை கிறிஸ்தவ சின்னமாக, கிறிஸ்து, கன்னி அல்லது ராணியைப் பாதுகாக்கும் ஒரு துறவி என்று விளக்கினர். இந்த ஐகான் ஒரு தனி பேர்பர் தெய்வத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், இதனால் திகியாவை ஒரு பேகன் ஆக்கியதாகவும் எம்'ஹமட் ஹாசின் ஃபந்தர் கூறினார். இருப்பினும், திகியா ஒரு கிறிஸ்தவராக இருப்பது பெரும்பாலும் கருதுகோளாகவே உள்ளது.

மோதல்கள் மற்றும் புனைவுகள்

தொகு

680களில் குசீலாவுக்குப் பிறகு பேர்பர் பழங்குடியினரின் போர் தலைவராக திகியா வெற்றி பெற்றா. மேலும் உமையா கலீபகத்தின் அரபு இஸ்லாமிய படைகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்தார். ஹசன் இப்னுல் நுமான் எகிப்திலிருந்து அணிவகுத்து, முக்கிய பைசண்டைன் நகரமான கார்தேஜ் மற்றும் பிற நகரங்களைக் கைப்பற்றினார் (வட ஆப்பிரிக்காவை முஸ்லீம் கைப்பற்றுவதைக் காண்க). இவர்களை தோற்கடிக்க ஒருவரைத் 'தேடியபோது, வட ஆப்பிரிக்காவின் மிக சக்திவாய்ந்த "பேர்பர்களின் ராணி"யான திகியா இருந்தார். இவரது படை நுமிடியாவுக்கு அணிவகுத்தது. 698ஆம் ஆண்டில், அல்ஜீரியாவில் நடந்த மெஸ்கியானா [5] போரில் (அல்லது "ஒட்டகங்களின் போர்") இன்றைய மாகாணமான ஓம் எல்-பௌகி மெஸ்கியானா அருகே படைகள் சந்தித்தன. [6]

இவர் கசனை தோற்கடித்தப் பின்னர் கசன் இஃப்ரிகியாவை விட்டு வெளியேறி, சிரேனைக்காவில் (லிபியா) நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்தார். எதிரி மிகவும் சக்திவாய்ந்தவர் மற்றும் திரும்பவும் படையெடுக்கும் நிலையில் இருப்பதை உணர்ந்த இவர், மலை மற்றும் பாலைவன பழங்குடியினருக்கு சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு எரிந்த பூமிக் கொள்கைப் பிரச்சாரத்தில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இடைவிடாத சோலைவாசிகளின் முக்கியமான ஆதரவை இவர் இழந்தார். இது அரபுப் படைகளை அழிப்பதற்குப் பதிலாக, இவருடைய அவநம்பிக்கையான முடிவு தோல்வியை விரைவுபடுத்தியது. [7]

குறிப்புகள்

தொகு
  1. See discussion of these supposed names by Talbi (1971).
  2. Naylor, Phillip C. (2009). North Africa: A History from Antiquity to the Present (in ஆங்கிலம்). University of Texas Press. p. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0292778788.
  3. Charles André Julien; Roger Le Tourneau (1970). Histoire de L'Afrique du Nord. Praeger. p. 13.
  4. See Hirschberg (1963) and Talbi (1971).
  5. Talbi (1971) suggests that based on the topography reported by al-Mālikī, the actual battlefield was the Wadi Nīnī.
  6. Philippe Sénac; Patrice Cressier (2012). Armand Colin (ed.). Histoire du Maghreb médiéval: VIIe-XIe siècle (in French). p. 111.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  7. However, even if true, the Arab accounts are considered to be greatly exaggerated. See Talbi (1971) and Modéran (2005). One thing that is certain is that Dihyā loved ornithology.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திகியா&oldid=3175923" இலிருந்து மீள்விக்கப்பட்டது