திசைகாட்டி

திசைகாட்டி (compass) புவியின் காந்த முனைகளுக்கு சார்பாக திசையைக் காட்டும் ஓர் திசைகாண் உபகரணமாகும். இது ஒரு காந்த சுட்டிக்காட்டியைக் கொண்டு காணப்படும். சாதாரணமாக இச்சுட்டிக்காட்டியானது வடதிசையைக் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். இக் காட்டியானது புவியின் காந்தப் புலங்களுக்கு தன்னை சுயாதீனமாக ஒழுங்கமைத்துக் கொள்ளும் தன்மையை உடையது. பொதுவாக திசைகாட்டியானது பிரதான திசைகளான வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளைக் காட்டும். திசைகாட்டியானது பயணங்களில் முக்கியமாக கடற்பயணத்தின் பாதுகாப்பையும் திறனையும் கூட்டுவதற்கு வழிவகுத்தது.[1][2][3]

ஒரு சாதாரண காந்தத்திசைகாட்டி

மேற்கோள்கள்

தொகு
  1. Li Shu-hua, p. 176
  2. Kreutz, p. 367
  3. Li Shu-hua, p. 182f.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திசைகாட்டி&oldid=4131281" இலிருந்து மீள்விக்கப்பட்டது