திசைப்பெயர் புணர்ச்சி
தமிழில், திசைப் பெயர்ப் புணர்ச்சி என்பது கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு ஆகிய சொற்கள் தம்மோடு தாம் இணைவதும்,பிற சொற்களுடன் இணைவதும் ஆகிய புணர்ச்சியாக் ஆகும். இதன் புணர்ச்சி விதிகள் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் எடுத்துரைக்கின்றன.
நன்னூல் விதி
தொகு“ | திசையொடு திசையும் பிறவுஞ் சேரின்
நிலையீ ற்றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் றகரம் னலவாத் திரிதலும் மாம் பிற |
” |
(நூற்பா.186)
விளக்கம்
தொகுதிசைச் சொல்லோடு திசைச்சொல்லும் பிற சொற்களும் இணையும் போது நிலைமொழி ஈற்றில் அமைந்த உயிர்மெய்யும்,அதனுடன் வந்த க் - என்னும் ஒற்றெழுத்தும் கெடும்.(கிழக்கு,வடக்கு)
மேற்கு,தெற்கு என்னும் சொற்கள் புணருகையில் நிலைமொழி ஈற்று உயிர்மெய் கெட்டு,ற்- என்னும் எழுத்து வருமொழியில் வரக்கூடிய சொல்லை பொருத்து ன்- ஆகவோ ல்-ஆகவோ மாறும்.
விதியில் கடைசியாகக் கூறப்பட்ட "பிற" என்ற படியால் சொற்களின் அடிப்படையை வைத்து வேறு வகையிலும் புணரலாம்
எடுத்துக்காட்டு
தொகுவடக்கு + மேற்கு = வடமேற்கு
கிழக்கு + திசை = கீழ்திசை,கீழைதிசை
கிழக்கு + கடல் = கீழ்க்கடல்,கீழைகடல்,கீழ்கடல்
தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு
தெற்கு + மேற்கு = தென்மேற்கு
மேற்கு + திசை = மேல்திசை,மேற்திசை,மேலைதிசை
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
கருவி நூல்
தொகுநன்னூல் மூலமும் விருத்தியுரையும் (அ.தாமோதரன் அவர்களின் பதிப்பு)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்