திசைவில்
திசைவில் (Azimuth) என்பது ஒரு பார்வையாளரின் வட தொடுவானத்திலிருந்து ஒரு வான்பொருளின் திசையினைக் குறிக்கும் வலஞ்சுழியாக அளவிடப்படும் பாகையாகும். எனவே, வானில் வடக்குத் திசையில் உள்ள பொருளின் திசைவில் 0 0 என்றும் கிழக்குத் திசையில் உள்ள பொருளுக்கு 90 0 என்றும் தெற்குத் திசைப் பொருளுக்கு 180 0 என்றும் மேற்குத் திசைப் பொருளுக்கு 270 0 என்றும் அளவிடப்படுகிறது. பொதுவில், ஒரு வான் பொருளின் திசைவில்லுடன் அதன் குத்துயரமும் சேர்த்துக் குறிப்பிடப்படும் போது அதன் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும்.[1]