திட்டமிட்ட கற்றல்
திட்டமிட்ட கற்றல் (Programmed learning) என்பது ஒரு ஆராய்ச்சி அடிப்படையிலான கற்றல் முறை ஆகும். இது கற்பவர்களுக்கு வெற்றிகரமாக பயன்படும் முறை.இந்த முறையானது பல்வேறுபட்ட உளவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆய்வுகளால் வழி நடத்தப்படுகிறது.[1] கற்றல் பொருள் என்பது ஒரு வகையான பாடநூல் வடிவிலோ அல்லது கற்பித்தல் இயந்திர வடிவிலோ அல்லது கணினி வடிவிலோ இருக்கலாம். இந்த கற்றல் பொருளானது கற்பிக்கப்பட அல்லது கற்க வேண்டிய பாடப்பொருளை ஒரு தருக்கரீதியான அல்லது சோதித்தறியப்பட்ட வரிசையில் வழங்குகிறது. இதன் பாடப்பொருள் சிறிய படிநிலைகளில் சிறு சிறு பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படியினையும் முடித்தபிறகு,புரிந்துகொள்ளலை மதிப்பீடு செய்வதற்கான கேள்விகள் இருக்கின்றன. உடனடியாக சரியான பதில்களும் காட்டப்படுகின்றன. இதன்மூலம் கற்பவர்கள், கற்கும் ஒவ்வொரு படிநிலையிலும் பதிலளிக்கவும், தாங்கள் கற்றுக்கொண்ட அளவை மதிப்பிடவும் முடிகிறது.[2].[3]
திட்டமிட்ட கற்றலை முன்கூட்டியே ஊகித்த எட்வர்ட் லீ தார்ண்டைக் 1912-இல் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
ஒரு நூலின் முதற்பக்கத்தைக் கற்றுத் தெரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே அந்நூலின் இரண்டாவது பக்கத்தைக் காணமுடியும்; இதுபோலவே அடுத்தடுத்து வரும் பக்கங்களுக்கும் என்ற வகையில், அந்நூலை ஏதேனுமொரு அதிசய இயந்திரத் திறனால் உருவாக்க முடியும் என்ற நிலையே கற்றலுக்கு உதவும் நூல்களுக்குத் தேவைப்படுகிறது.
"தார்ண்டைக், அவரது கருத்துக்களைக் கொண்டு மேற்பட்டு எதுவும் செய்யவில்லை. ஆனால், இவ்வாறான முதலாவது கற்றல் இயந்திரத்தை 1926-ஆம் ஆண்டில் சிட்னி. எல். பிரேசி உருவாக்கினார்.[6][7] முதலில் சுய மதிப்பீட்டு முறையாகத் துவங்கிய இது... அதனது கற்பிக்கும் திறனையும் வெளிப்படுத்தியது" [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lumsdaine A.A. 1963. Instruments and media of instruction. In N.L. Gage (ed) Handbook of research on teaching. Chicago: AERA and Rand McNally, 583–682.
- ↑ Margulies S. & Eigen L.D. 1961. Applied programmed instruction. New York: Wiley.
- ↑ Markle S.M. 1969. Good frames and bad: a grammar of frame writing. 2nd ed, New York: Wiley, Chapters 1 & 4.
- ↑ Thorndike E.L. 1912. Education: a first book. New York: Macmillan, 165.
- ↑ McNeil S. A hypertext history of instructional design
- ↑ Pressey S.L. 1926. A simple apparatus which gives tests and scores – and teaches. School & Society 23, 373–6.
- ↑ Pressey, S.L. 1927. A machine for automatic teaching of drill material. School & Society 25, 544–552.
- ↑ Hilgard E.R. 1966. Learning & the technology of instruction. Chapter 16 in Hilgard E.R. & Bower G.H. 1966. Theories of learning. 3rd ed, New York: Appleton-Century-Crofts, p554–561 Programmed learning.