திணைக்களங்கள் (இலங்கை)
நீர்
இலங்கையில் திணைக்களங்கள் (departments) என்பது மக்களுக்கு பண்டங்களையும் சேவைகளையும் வழங்குவதற்காக நிறுவப்பட்ட அரசு வணிக அமைப்பாகும். திணைக்களங்கள் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் முதன் முதலில் நிறுவப்பட்டன. சேவை நோக்கத்துடன் நிறுவப்பட்ட இலாப நோக்கமற்ற இவை தமது செலவினங்களுக்காக வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுகின்றது. சில திணைக்களங்கள் தமது செலவினங்களுக்காக வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றன. வணிக அடிப்படையில் இலங்கையில் முதன் முதலில் தாபிக்கப்பட்ட வர்த்தக திணைக்களம் தபால் தந்தி தொடர்பு திணைக்களமும், புகையிரதத் திணைக்களமுமாகும்.
திணைக்களத்தின் பண்புகள்.
தொகு- உரிமை அரசிற்குரியது.
- உரிய அமைச்சினால் நாடாளுமன்றத்தில் திணைக்கள சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றது.
- சட்ட நடவடிக்கைகள் திணைக்களப் பெயருக்கன்றி திணைக்கள தலைவரின் உத்தியோக பூர்வ பெயருக்கு எதிராகவே அமைய வேண்டும்.
- திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர்கள், நாடாளுமன்றம், நிதிச்சட்டம் போன்றவற்றுக்கு கட்டுப்படக்கூடியது.
- இலாபங்கள் அதன் முன்னேற்றத்துக்கும் அரச திரட்டு நிதிக்கும் சேரும்.