திண்டுக்கல் டிராகன்ஸ்

திண்டுக்கல் டிராகன்ஸ் (Dindigul Dragons) என்பது தமிழ்நாடு பிரீமியர் லீக் இருபது20 துடுப்பாட்டத் தொடர்களில் திண்டுக்கல் மாவட்ட அனியினை பிரதிநிதித்துவப் படுத்தும் ஓர் அணியாகும்.[1]

டேக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் நிர்சாக இயக்குநர் மற்றும் துணைத் தலைவருமான சிறீநிவாசன் என்பவர் இந்த அணியின் உரிமையாளர் ஆவார்.[2] இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரான வெங்கட்டரமனா என்பவர் இந்த அணியின தலமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்தத் துடுப்பாட்டத் தொடரின் பல பருவங்களில் ரவிச்சந்திரன் அசுவின் இந்த அணியின் தலைவராக இருந்துள்ளார்.[3]

உரிம வரலாறு தொகு

டேக் சொல்யூஷன்ஸின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் 7 வது அதிக விலைக்கு இந்த ணியினை ஏலத்தில் எடுத்தார். அவர் திண்டுக்கல் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தார், அந்த அணிக்கு திண்டுக்கல் டிராகன்கஸ் என்று பெயரிடப்பட்டது. திண்டுக்கல் டிராகன்களின் துடுப்பாட்ட அணியின் அரிமுக விழா ஆகஸ்ட் 22, 2016 திங்கட்கிழமை திண்டுக்கல் நகரத்தில் உள்ள என்.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் விஷ்ணு விஷால் கலந்து கொண்டார். திண்டுக்கல் மாவட்ட துடுப்பாட்ட சங்கத் தலைவர் திரு ஆர்.எஸ்.கே.ரகுராம், கெளரவ விருந்தினர் மற்றும் புரவலர் தலைமைத் தலைவர் திரு ஜே சம்பபு ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.[4][5]

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2016 தொகு

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2016 பருவமானது 2016 ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கியது. சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இருந்ததன் காரணமாக அணியின் தலைவர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தத்ய் தொடரில் பங்கேற்கவில்லை, வி சுப்பிரமணிய சிவா அவருக்குப் பதிலாக திண்டுக்கல் டிராகன்களுக்கு தலைவனாக இருந்தார். த்யிண்டுக்கல் அணி சிறப்பான துவக்கத்தினை கொண்டிருந்தது. முதல் நான்கு போட்டிகளில்வென்றது. அதில் ஒரு போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று பின் வென்றது. . ரூபி காஞ்சி வாரியர்ஸுக்கு துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆர் அஸ்வின் இதில் கலந்து கொண்டார். சென்னை சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் தோல்வியினைக் கண்டது. அசுவின் இரு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்து அரையிறுதிச் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெற்றது. ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து முக்கியமான அரையிறுதிப் போட்டிகளிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் நியூசிலாந்திற்கு எதிரான இந்தியத் தொடரின் காரணமாக பி.சி.சி.ஐ அஸ்வினை அதில் விளையாட அனுமதிக்கவில்லை. அரையிறுதிப் போட்டியில் இந்த அணி டுடி பேட்ரியாட்ஸ் அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. திண்டுக்கல் அணிக்காக அதிகபட்சமாக ஜகதீசன் 397 ரன்கள் எடுத்தார், முருகன் அஸ்வின் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2017 தொகு

இந்தியத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் துடுப்பாட்டத் தொடரில் ரவிச்சந்திரன் அசுவின் இடம்பெற்றதால் ரவீச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக அஸ்வின் வெங்கட்ராமன் 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் தலைவராக நியமிக்கப்பட்டார்.[6] டூடி பேட்ரியாட்ஸ் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் இந்த அணி தோல்வியடைந்தது. அடுத்த போட்டியில், இது மதுரை சூப்பர் ஜயண்ட்ஸை 10 இலக்குகளில் தோற்கடித்து 57 பந்துகள் மீதம் இருந்த நிலையில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடத்தினைப் பிடித்ததால் இந்த அணி பிளே- ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

சான்றுகள் தொகு

வெளியிணைப்புகள் தொகு