தினாக்சைட்டு
இனோசிலிக்கேட்டு கனிமம்
தினாக்சைட்டு (Tinaksite) என்பது K2Na(Ca,Mn2+)2TiO[Si7O18(OH)] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.Tnk[4] வடக்கு உருசியாவில் இக்கனிமம் கண்டறியப்பட்டது. தினாக்சைட்டு சாம்பல்-வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு அல்லது பழுப்பு நிறமாகக் காணப்படுகிறது. மேலும் இது பெரும்பாலும் சிலிக்கேட்டு வகை கனிமமான சாரோயிட்டு கனிமத்துடன் காணப்படுகிறது.[5] கனிமத்தின் பகுதிக் கூறுகளாக உள்ள தைட்டானியம், சோடியம், பொட்டாசியம், சிலிக்கான் ஆகிய தனிமங்களின் பெயர்களிலிருந்து இக்கனிமத்தின் பெயர் பெறப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் முதன்முதலில் 1965 ஆம் ஆண்டில் தினாக்சைட்டு கனிமத்தை ஒரு கனிமமாக அங்கீகரித்தது.
தினாக்சைட்டு Tinaksite | |
---|---|
தினாக்சைட்டு (பழுப்பு) மற்றும் தொடர்புடைய சாரோயிட்டு | |
பொதுவானாவை | |
வகை | சிலிக்கேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | K2Na(Ca,Mn2+)2TiO[Si7O18(OH)] |
இனங்காணல் | |
நிறம் | இளஞ் சிவப்பு, வெளிர் மஞ்சள், இலேசான பழுப்பு |
படிக இயல்பு | இழை, படிகம் அல்லது பட்டகம், ஆரம். |
படிக அமைப்பு | முச்சரிவச்சு |
பிளப்பு | ஒரு திசையில் சரிபிளவு, ஒரு திசையில் தெளிவின்மை |
மோவின் அளவுகோல் வலிமை | 6 |
மிளிர்வு | பளபளக்கும் |
கீற்றுவண்ணம் | White |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் மற்றும் கசியும் |
ஒப்படர்த்தி | 2.82 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα = 1.593 nβ = 1.621 nγ = 1.666 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.073 |
மேற்கோள்கள் | [1][2][3] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலெகோண்டைட்டு கனிமத்தை Tnk[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tinaksite Mineral Data".
- ↑ "Tinaksite".
- ↑ Mineralienatlas
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "TINAKSITE (Potasium Sodium Calcium Manganese Titanium Iron Oxide Silicate Hydroxide)".
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.