தினாநாத் கோபால் டெண்டுல்கர்

தினாநாத் கோபால் டெண்டுல்கர் என்பவர் இந்திய எழுத்தாளரும், ஆவணத் திரைப்பட இயக்குநரும் நூலாசிரியரும் ஆவார். எட்டு தொகுப்புகளைக் கொண்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கைப் பற்றிய நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைக் குறிப்புதொகு

இவர் மகாராஷ்டிராவில் உள்ள இரத்தினகிரியில் பிறந்தவர். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது; ஆனால் அதனை ஏற்க மறுத்தார். பத்ம பூசண் விருதுக்குப் பதிலாக ஒரு கைக்கடிகாரத்தை வழங்குமாறு வேண்டினார்.[1]

ஆக்கங்கள்தொகு

இவர் கீழ்க்கண்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

  • மகாத்மா: லைப் ஆப் மோகந்தாசு கரம்சந்து காந்தி
  • ரசியாவில் 30 மாதங்கள்
  • பெயித் இசு எ பேட்டில் (கான் அப்துல் கப்பார் கான் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு)
  • சவகர்லால் நேரு இன் பிக்சர்சு
  • காந்தி இன் சம்பரன்
  • சோவியத் சம்சுகிருதி
  • காந்தி: அவரது வாழ்க்கையும், ஆக்கங்களும்

சான்றுகள்தொகு