திமித்ரி வி. பிசிகலோ
திமித்ரி வி. பிசிகலோ (Dmitry V. Bisikalo) ஓர் உருசிய வானியற்பியலாளரும் அறிவியல் முதுமுனைவரும் பேராசிரியரும் ஆவார். இவர் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் உயராய்வு உறுப்பினர். இவர் அதன் வானியல் நிறுவனத்தின் இயக்குநரும் ஆவார்(1).
திமித்ரி வி. பிசிகலோ Dmitry V. Bisikalo | |
---|---|
பிறப்பு | 3 மே 1961 இர்க்குத்சுக், சோவியத் ஒன்றியம் |
வாழிடம் | மாஸ்கோ, உருசியா |
தேசியம் | உருசியர் |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் வானியல் நிறுவனம் |
கல்வியும் பணியும்
தொகுஇவர் 1961 இல் சோவியத் ஒன்றியத்தில் உள்ள இர்க்குட்சு எனும் இடத்தில் பிறந்தார்.
இவர் 1984 இல்மாஸ்கோ இயற்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தன் இளவல் பட்டம் பெற்றார். இவர் சோவியத் ஒன்றிய அறிவியல் கல்விக்கழகத்தின் வானியல் மன்றத்தில் முனைவர் ஆராய்ச்சிக்குச் சேர்ந்தார்.
இவர் 1988 இல் தொடர் மூலக்கூற்று வளிம இயக்கப் பின்னணியில் உள்வால்வெள்ளி கோமா பற்றிய ஆய்வு எனும் தலைப்பில் ஆய்வு முடித்து முனைவர் பட்டம் பெற்றார்.
இவர் 1998 இல் தன் முதுமுனைவர் பட்டத்தை மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுடெர்ன்பர்கு வானியல் நிறுவனத்தில் ஊடாடும் இரும விண்மீன் அமைப்புகளில் பொருண்மைப் பரிமாற்ற வளிம் இயக்க ஆய்வு எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு பெற்றார்.
இவர் 2001 இல் இருந்து உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் வானியல் நிறுவனத்தில் இணை இயக்குநராக உள்ளார்.
இவர் 2010 இல் வானியற்பியல் பேராசிரியராகவும் 2011 இல் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் உயர்நிலை உறுப்பினர் ஆனார்.
இவர் 2016 இல் இருந்து உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் வானியல் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார்.
அறிவியல் பணி
தொகுஇவர் ஊடாடும் இரும விண்மீன்கள், அகந்திரளும் வட்டுகளின் வளிம இயக்கவியலில் வல்லுனர் ஆவார். இவர் மூலக்கூறு (போல்ட்சுமன் இயக்க சமன்பாட்டுக்குத் தீர்வு காணல்), தொடர் (ஆய்லர் வளிம இயக்கச் சமன்பாடுகளுக்குத் தீர்வு காணல்) வளிம இயக்கவியல் முறைகளால் வானியற்பியல் பொருட்களைப் புலனாயும் எண்ணியல் முறைகளை உருவாக்கலில் பங்கேற்கிறார். இவர் 200 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும்4 தனிவரைவு நூல்களையும் 3 தனிவரைவுநூல்களின் மீள்பார்வைகளையும் வெளியிட்டுள்ளார்.
முதன்மை அறிவியல் சாதனைகள்
தொகுவானியற்பியல் நோக்கீடுகளை வளிம இயக்கத்துடனும் காந்தப் பாய்ம இயக்க ஒப்புருவாக்கங்களுடனும் இணைத்து வானியற்பியல் வழிகாட்டுதலை உருவாக்கல்.
இரும விண்மீன்களில் நிகழும் பொருண்மைப் பரிமாற்றத்துக்கான தன்னிறைவுப் படிமத்தை உருவாக்கல். இரும விண்மீன்களின் அகந்திரளும் வட்டுக் கட்டமைப்பை ஆய்தல்.
குளிர்ந்த அகந்திரள் வட்டில் நிகழும் தலையாட்ட அடர்த்தி அலைகளை கண்டுபிடித்தல்.
நெருங்கிய இரும விண்மீன்களில் பொது கவருறை உருவாதலைப் பற்றி முதன்முதலில் ஆய்வு மேற்கொண்டார்.
முப்பருமான வளிம இயக்க ஒப்புருவாக்கங்களின் முடிவுகளைக் கொண்டுசெவ்வியல் இனைவாழ்வு விண்மீன்களின் வெடிப்புச் செயல்பாட்டை விவரித்தல்.
இடைநிலை முனைவு இரும விண்மீன் அமைப்புகளின் அகந்திரள்வட்டுக் கட்டமைப்பின் மீது காந்தப்புலத்தின் தாக்கம் பற்றி முதன்முதலில் ஆய்தல்.
காந்தக் கோளங்களில் தோன்றும் உயராற்றல் துகள்கள் அமைந்த கோள் மேல்வளிமண்டலங்களின் எண்ணியல் ஊடாட்ட இயக்கப் படிமத்தை உருவாக்கல். இந்தப் படிமம் புவி, வெள்ளி, செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களின் பல வளிமண்டல ஆய்வுச் செய்முறைகளில்(IMAGE, HST, MEX, VEX) பரவலாகப் பயன்பட்டுவருகிறது.
இவரது பணிகள் உருசிய அறிவியல் கல்விக்கழக ஆண்டறிக்கைகளில் தொடர்ந்து சான்றுகாட்டப் படுகின்றன.
கல்விப்பணி
தொகுஇவர் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தின்மாஸ்கோ இயற்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பயன்முறை, கோட்பாட்டு இயற்பியல் துறையில் பேராசிரியராக விரிவுரை ஆற்றி வருகிறார். இவரின்கீழ் பதின்மர் முனைவர் பட்டம் பெற்றனர்.
நிறுவனத்திறன்
தொகுஇவர் வானியல் இதழ் (வானியல் அறிக்கைகள்) (3) எனும் உருசிய இதழின் பதிப்புக்குழுவிலும் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் விண்வெளி மன்றத்திலும் பன்னாட்டு வானியல் ஒன்றியத்திலும் (4) ஐரோப்பிய வானியல் ஒன்றியத்திலும் உறுப்பினராக உள்ளார். உருசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளின் ஒருங்கிணைப்புக் குழுக்களில் முனைவாகச் செயல்பட்டு வருகிறார். இவர் இன்சானில் உள்ள செய்முறை வானியலுக்கான அறிவியல், கல்வி மையத்தை உருவாக்கி 2003 இல் இருந்து வழிநடத்தி வருகிறார்.
விருதுகள்
தொகு- 2012 — ஆர்டன் பதக்கம் "தகைமை II".
- 2011 —அணுகிய இரும விண்மீன்களின் தொடர்ந்த கள ஆய்வுக்கான ஏ.ஏ. பெலோபோல்சுகி விருது.
- இவர் 1996, 1999, 2009 ஆகிய ஆண்டுகளில், அவ்வவ்வாண்டின் சிறந்தநூல் வெளியீட்டுக்காக பன்னாட்டு கல்வியியல் வெளியீட்டு நிறுவனமாகிய நாவுகா/இண்டர்பீரியாடிகாவால் விருது வழங்கப்பட்டுள்ளார்.
தனிவரைவு நூல்கள்
தொகு- D.V. Bisikalo, A.G. Zhilkin, A.A. Boyarchuk. Gaseous dynamic of close binary stars // Moscow: FIZMATLIT, 2013, 632 p.(in Russian).
- A.G. Zhilkin, D.V. Bisikalo, A.A. Boyarchuk. Flow structure in magnetic close binary stars // Phys. Usp., 2012, Vol. 55, pp. 115–136.
- A.M. Fridman, D.V. Bisikalo. The nature of accretion disks of close binary stars: overreflection instability and developed turbulence // Phys. Usp., 2008, Vol. 51, pp. 551–576.
- A.A.Boyarchuk, D.V.Bisikalo, O.A.Kuznetsov, V.M.Chechetkin. Mass Transfer in Close Binary Stars // Advances in Astronomy and Astrophysics Series, Vol. 6, London and New York: Taylor and Francis, 2002, 365 p.
- Marov M.Ya., Shematovich V.I., Bisikalo D.V., Gerard J.-C. Nonequilibrium processes in the planetary and cometary atmospheres: Theory and Applications // Kluwer Academic Publishers. Dordrecht, 1997, pp. 1–293.
- Marov M.Ya., Shematovich V.I., Bisikalo D.V. Nonequilibrium aeronomic processes. A kinetic approach to the mathematical modeling // Space Science Reviews, 1996, Vol. 76, Nos. 1/2, pp. 1–204.
- Marov M.Ya., Shematovich V.I., Bisikalo D.V. Kinetic modelling of a rarefied gas in astronomy tasks // Moscow: Publ. Keldysh Institute of Applied Mathematics, 1990, pp. 1–250 (in Russian).
வெளி இணைப்புகள்
தொகு- 1. Institute of Astronomy of the Russian Academy of Sciences Inasan.rssi.ru
- 2. Web of Science Apps.webofknowledge.com
- 3. Astronomy Reports Journal of MAIK Nauka/Interperiodica publishing house Maik.ru
- 4. International Astronomical Union Iau.org
- 5. European Astronomical Society Eas.unige.ch