திமிஷ்கு குண்டுவெடிப்பு, மார்ச்சு 2017

சிரியா நாட்டின் திமிஷ்கு நகரில் 2017 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மூன்று தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தன. முதலாம் தாக்குதல் மார்ச்சு 11 அன்று ஈராக்கிய ஷியா பிரிவு புனிதப் பயணம் செய்த பயணிகள் மீது நடத்தப்பட்டது. இதில் 74 பேர் மரணமடைந்தனர் 120 பேர் காயமடைந்தனர்.[1] தஹ்ரிர் அல்-ஷாம் (Tahrir al-Sham) இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது தாக்குதல் 15 மார்ச்சு அன்று நடத்தப்பட்டது. இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் உணவகம் ஒன்றில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.[2] இதில் 40 பேர் மரணமடைந்தனர், 30 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இசுலாமிய அரசு தீவிரவாத இயக்கம் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது.

திமிஷ்கு குண்டுவெடிப்பு, மார்ச்சு 2017
திமிஷ்கு நகரம்.
இடம்திமிஷ்கு, சிரியா
நாள்மார்ச்சு 11, 2017 (முதல் தாக்குதல்)
மார்ச்சு 15, 2017 (இரண்டாம் மற்றும் மூன்றாம் தாக்குதல்)
இறப்பு(கள்)74 (முதல் தாக்குதல்)
40 (இரண்டாவது மற்றும் மூன்றாவது தாக்குதல்)
மொத்தம்: 114
காயமடைந்தோர்120 (முதல் தாக்குதல்)
30+ (இரண்டாவது மற்றும் மூன்றாவது தாக்குதல்) மொத்தம்: 150+
தாக்கியோர்தாஹ்ரிர் அல்-ஷாம் (முதல் தாக்குதல்)
இசுலாமிய அரசு (இரண்டாவது மற்றும் மூன்றாவது தாக்குதல்)

மேற்கோள்கள்தொகு

  1. "Twin bombing kills at least 40 in Damascus' Old City". Al-Jazeera. 2017-03-11. 2017-03-11 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Syria war: Twin suicide attacks kill dozens in Damascus". Al-Jazeera. 15 March 2017. 15 March 2017 அன்று பார்க்கப்பட்டது.