தியான் சந்த் விருது
தியான் சந்த் விருது (Dhyan Chand Award) இந்தியாவில் விளையாட்டுக்களில் சிறப்புமிகு வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் ஓர் விருதாகும். புகழ்பெற்ற வளைதடிப் பந்தாட்ட வீரரான தியான் சந்த் நினைவாக 2002 ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு இந்திய ரூபாய்கள் ஐந்து இலட்சம் (500000) நிதிப்பரிசு தவிர ஓர் பாராட்டுச் சான்றிதழ், சிலைவடிவம், மற்றும் அலங்கார உடையும் வழங்கப்படுகிறது.
விருது பெற்றோர் பட்டியல்
தொகுஎண் | பெயர் | ஆண்டு | விளையாட்டு |
---|---|---|---|
1. | அபர்ணா கோஷ் | 2002 | கூடைப்பந்தாட்டம் |
2. | அசோக் திவான் | 2002 | வளைதடிப் பந்தாட்டம் |
3. | சாகுராஜ் பிரஜ்தார் | 2002 | குத்துச்சண்டை |
4. | சார்லசு கார்னியலசு | 2003 | வளைதடிப் பந்தாட்டம் |
5. | தரம் சிங் மான் | 2003 | வளைதடிப் பந்தாட்டம் |
6. | ஓம் பிரகாஷ் | 2003 | கைப்பந்தாட்டம் |
7. | ராம் குமார் | 2003 | கூடைப்பந்தாட்டம் |
8. | சிமிதா யாதவ் | 2003 | துடுப்பு படகோட்டம் |
9. | அர்தயாள் சிங் | 2004 | வளைதடிப் பந்தாட்டம் |
10. | லாப் சிங் | 2004 | தடகளம் |
11. | மெகெந்தளே பரசுராம் | 2004 | தடகளம் |
12. | மனோஜ் கோத்தாரி | 2005 | பில்லியர்ட்சு மற்றும் மேடைக் கோற்பந்தாட்டம் |
13. | மாருதி மானே | 2005 | மற்போர் |
14. | ராஜிந்தர் சிங் | 2005 | வளைதடிப் பந்தாட்டம் |
15. | அரிச்சந்திர பிரஜ்தார் | 2006 | மற்போர் |
16. | நந்தி சிங் | 2006 | வளைதடிப் பந்தாட்டம் |
17. | உதய் பிரபு | 2006 | தடகளம் |
18. | ராஜேந்திர சிங் | 2007 | மற்போர் |
19. | சம்சேர் சிங் | 2007 | கபடி |
20. | வரீந்தர் சிங் | 2007 | வளைதடிப் பந்தாட்டம் |
21. | கியான் சிங் | 2008 | மற்போர் |
22. | அக்கம் சிங் | 2008 | தடகளம் |
23. | முக்பெய்ன் சிங் | 2008 | வளைதடிப் பந்தாட்டம் |
24. | இஷார் சிங் தியோல் | 2009 | தடகளம் |
25. | சத்பீர் சிங் தயா | 2009 | மற்போர் |
| . | ஷாகித் ஹக்கீம் | 2017 | கால் பந்து |- |}
| | பூபேந்திரசிங் | 2017 | ஹாக்கி |- |}