தியோடர் கார்னர் பரிசு

தியோடர் கார்னர் பரிசு (Theodor Körner Prize) என்பது தியோடர் கார்னர் நிதியத்தால் கலாசாரம் அல்லது அறிவியல் முன்னேற்றங்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் வருடாந்திர ஆத்திரிய விருதுகளின் தொகுப்பாகும்.

இந்த விருது வியன்னா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகிறது. இந்த பரிசு கலை மற்றும் அறிவியலில் ஆஸ்திரியாவில் வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும்.

வரலாறு.

தொகு

1953ஆம் ஆண்டில், ஆஸ்திரியக் கூட்டாட்சி குடியரசுத் தலைவர் கார்னரின் 80ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்காக வழங்கப்பட்ட அனைத்துப் பரிசுகளையும் நிராகரித்ததுடன் அதற்குப் பதிலாக கலை அறிவியலை மேம்படுத்துவதற்கு ஒரு நிதியை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்.[1] இதன் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

நிபந்தனைகள்

தொகு

மாந்தரியல், கலாசாரம், மருத்துவம், அறிவியல் தொழில்நுட்பம், சட்டம், சமூக அறிவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சமர்ப்பிக்கப்படக்கூடிய ஆய்வுத் திட்டங்கள் மற்றும் வெளியிடப்படும் அறிவியல் கட்டுரைகளுக்கும், கலைத் துறையில், நுண்கலைகள், புகைப்படம் எடுத்தல், இலக்கியம் மற்றும் இசை அமைப்பு படைப்புகள் என்பனவும் விருதிற்காகப் பரிசீலிக்கப்படுகின்றன.[2] விருதிற்கு விண்ணப்பிக்கும் அறிவியலாளர்கள் மற்றும் கலைஞர்களின் வயது 40-குள் இருக்கவேண்டும் (சில விதிவிலக்குகள் உள்ளன). இந்த பரிசு "செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பணி" அதாவது சமர்ப்பிக்கப்பட்ட இன்னும் முடிக்கப்படாத பணிகளுக்காக வழங்கப்படுகிறது. பொதுவான அறிவியல் அல்லது கலைத் தரம் தான் தீர்மானகரமான காரணியாக உள்ளது. விண்ணப்பத்தில் முன்னறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பணி முடிக்கப்பட வேண்டும்.[3]

பெறப்படும் திட்டங்கள், கலை அறிவியல் பிரிவு நிபுணர்களைக் கொண்ட ஒரு சுயாதீன ஆலோசனைக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. வாரியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், அறங்காவலர்கள் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கிறார்கள்.

பரிசுத் தொகையின் அளவு கிடைக்கக்கூடிய நிதி மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட மற்றும் தகுதியான படைப்புகளின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. பரிசுத் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு விருது வழங்கும் விழாவில் வழங்கப்படுகிறது, மேலும் மீதமுள்ள ஒரு பங்கு ஆய்வுத் திட்டம் முடிந்ததும் வழங்கப்படுகிறது.

விருது பெற்றோர்

தொகு
  • ஓட்டோ கோனிக் (1954)
  • மரியா லாசுனிக் (1955)
  • காட்பிரைட் வான் ஐனெம் (1955)
  • வேரா பெரா-மிகுரா (1956)
  • கெல்முட் சில்க் (1959)
  • கெர்தா பர்ன்பெர்க் (1959)
  • கெர்பர்ட் டிச்சி (1959)
  • குந்தர் நெனிங் (1960)
  • வெர்னர் ஓக்ரிஸ் (1961)
  • ஆர்ட்வின் கேம்பர் (1962)
  • ப்ரீடெரிக் மேரோக்கர் (1963)
  • அர்னால்ப் ரெய்னர் (1964)
  • ஆண்ட்ரியாசு கோல் (1966)
  • வெர்னர் சினீடர் (1966)
  • பிரான்சு கெய்ன் (1966)
  • வெண்டலின் சிமிட்-டெங்லர் (1968)
  • ஆண்ட்ரியாசு ஒகோபென்கோ (1968)
  • இங்க்ரிட் லியோடோல்டர் (1969)
  • லுட்விக் கிறிசுடியன் அட்டர்சி (1972)
  • காட்பிரைட் கெல்ன்வீன் (1974)
  • உல்ரிக் ட்ரூகர் (1977)
  • எல்ப்ரீட் கெர்சுட்ல் (1978)
  • எஃப். இசுகாட் கெசு (1981)
  • ஹூபர்ட் சீலெக்கி (1982)
  • ரெனீ ஷ்ரோடர் (1984)
  • எல்ப்ரீட் சுர்டா (1984)
  • வொல்ப்காங் நியூபர் (1985)
  • பார்பரா நியூவிர்த் (1986)
  • கிளெமென்சு ஜாப்லோனர் (1988)
  • மார்கோட் பில்சு (1990)
  • கரின் பெர்கர் (1991)
  • இராபர்ட் மெனாசுலே (1992)
  • பெர்ன்ட் ரிச்சர்ட் டாய்ச் [டி] (1997)
  • டைன் பெட்ரிக் (1998)
  • பால் விடேசாட் (2001)
  • தாமசு மோல்க் (2003)
  • எரிகா வெய்ன்சியர்ல் (2004)
  • இம்மானுவேல் சார்பென்டியர் (2009)

மேற்கோள்கள்

தொகு
  1. Arbeiterkammer Wien. "Theodor Körner Fonds: Über den Fonds". Theodorkoernerfonds.at. பார்க்கப்பட்ட நாள் 2013-05-09.
  2. Arbeiterkammer Wien. "Theodor Körner Fonds: Was ist der Fonds?". Theodorkoernerfonds.at. பார்க்கப்பட்ட நாள் 2013-05-09.
  3. Arbeiterkammer Wien. "Theodor Körner Fonds: Wer wird gefördert?". Theodorkoernerfonds.at. பார்க்கப்பட்ட நாள் 2013-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோடர்_கார்னர்_பரிசு&oldid=4034080" இலிருந்து மீள்விக்கப்பட்டது