தியோரியா தால்
தியோரியா தால் (மற்ற பெயர்கள்: தேவரியா, தியோரியா) என்பது உத்தராகண்டு மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஏரி. இது உக்கிமத்-சோப்தா சாலையில் உள்ள சாரி கிராமத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,438 மீட்டர் (7,999 அடி) உயரத்தில் கார்வால் இமயமலையில் உள்ள இதனைச் சுற்றி பசுமையான காடுகளும் பனி மலைகளும் உள்ளன. இந்த ஏரியில் இருந்து 300° சுற்றில் தெரியும் அழகிய காட்சிக்காக புகழ்பெற்றது.
தியோரியா தால் | |
---|---|
ஏரியில் சௌக்கம்பா கொடுமுடியின் பிரதிபலிப்பு | |
ஆள்கூறுகள் | 30°31′20″N 79°7′40″E / 30.52222°N 79.12778°E |
வடிநில நாடுகள் | இந்தியா |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 2,438 m (7,999 அடி) |