திரால் வனவிலங்கு சரணாலயம்
திரால் வனவிலங்கு சரணாலயம் (Tral Wildlife Sanctuary) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ளது. காசுமீர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மத்திய ஆசிய சிவப்பு மான்களின் கிளையினமான ஆங்குல் எனப்படும் காசுமீர் மான் அழிந்து விடாமல் பாதுகாப்பதற்காக 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதியன்று இச்சரணாலயம் உருவாக்கப்பட்டது. சரணாலயம் 154.15 சதுரகிலோமீட்டர் பரப்பளவிற்கு (59.52 சதுர மைல்) பரவியுள்ளது.[1] பன்யார்-சிக்கர்கா மற்றும் கிராம் வனவிலங்கு பாதுகாப்பு காப்பகங்களும் அவந்திபோரா வனப் பிரிவின் சில வனப் பிரிவுகளும் ஒன்றிணைக்கப்பட்டு இச்சரணாலயம் உருவானது.[2] திரால் வனவிலங்கு சரணாலயம் தாச்சிகம் தேசிய பூங்கா மற்றும் ஓவரா-ஆரு வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றி ஓர் இடையகமாக செயல்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, இச்சரணாலயத்தில் 14 அங்குல் மான்கள்கள் உள்ளன. தாச்சிகம் தேசியப் பூங்காவில் 275 அங்குல் மான்கள் உள்ளன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Wildlife sanctuary tag for Tral for Hungul protection". https://www.business-standard.com/amp/article/pti-stories/wildlife-sanctuary-tag-for-tral-for-hungul-protection-119102600526_1.html.
- ↑ Network, KL News (2019-10-26). "Tral Wildlife Sanctuary comes into being". Kashmir Life (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-11.
- ↑ "{Census} Hangul population in J&K sees uptick, wildlife dept elated". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-19. பார்க்கப்பட்ட நாள் 2023-11-11.