திரிகுத்து

திரிகுத்து ஒரு உத்தித்திற விளையாட்டு. திருவிழாக் காலங்களில் இது ஒருவகைச் சூது விளையாட்டாகவும் நடக்கும்.

திரியில் குத்துதல் கோட்டுப்படம்

நீளமான திரியை இரண்டாக மடக்கித் தரையில் படிமானமாகச் சுற்றுவர். ஒருவர் சுற்றுபவர். மற்றொருவர் குத்துபவர். சுற்றி வைத்திருக்கும் திரிகளுக்கிடையில் எங்காவது ஓரிடத்தில் பெரிய ஊசியால் குத்துவார். சுற்றியவர் திரியை இரட்டையாகப் பிடித்து இழுக்க வேண்டும். இழுக்கும்போது திரி ஊசிக்குள் மாட்டிக்கொண்டால் குத்தியவருக்கு வெற்றி. ஊசிக்குள் மாட்டாமல் திரி வந்துவிட்டால் சுற்றியவருக்கு வெற்றி.

திருவிழாவில் சூதாட்டக்கார திரிக்காரன் சாதுரியமாகத் திரியை மாற்றிப் பிடித்து எடுத்து குத்தியவர் பந்தையம் வைத்த பணத்தை ஏமாற்றி எடுத்துக்கொள்வான். திரிகுத்தும் மக்கள் ஏமாந்துவோவர்.

மேலும் பார்க்க

தொகு

கருவிநால்

தொகு
  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிகுத்து&oldid=1003437" இலிருந்து மீள்விக்கப்பட்டது