திரிசூலக்கல்

திரிசூலக்கல் அல்லது சூலக்கல் என்பது, சிவன் கோயில்களுக்கு விடப்பட்ட நிலத்தின் எல்லைகளைக் குறிப்பதற்காக நாட்டப்படும் கற்கள் ஆகும். இவற்றில் திரிசூலக் குறி பொறிக்கப்பட்டிருக்கும்.[1] இதன் காரணமாகவே இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. சைவக் கோயில்களுக்குத் தானமாகக் கொடுக்கப்படும் நிலத்தின் எல்லைகளில் நாட்டப்படும் திரிசூலக்கற்களில் கல்வெட்டுக்களும் காணப்படுவது உண்டு. பொதுவாக, இக்கல்வெட்டுக்கள், தானம் அளிக்கப்பட்ட காலம், தானம் அளிக்கப்பட்ட கோயிலின் பெயர், தானம் அளித்தவர்களின் பெயர் போன்ற விபரங்களை உள்ளடக்கியிருப்பது வழக்கம்.

குறிப்புக்கள் தொகு

  1. தமிழ்ப் பேரகராதியில் சூலக்கல்[தொடர்பிழந்த இணைப்பு] என்னும் சொல்லுக்கான பதிவு.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிசூலக்கல்&oldid=3585344" இலிருந்து மீள்விக்கப்பட்டது