திரிபுக் கொள்கை
திரிபுக் கொள்கை (ஆங்கில மொழி: heresy) என்பது நிறுவப்பட்ட நம்பிக்கைகளுக்கு அல்லது முறைமைகளுக்கு முரண்பட்ட வலுவான கோட்பாடு ஆகும். திரிபுக் கொள்கையாளர் என்போர் அத்தகைய கோட்பாடுகளைப் பரப்புவோர் ஆவர்.[1] திரிபுக் கொள்கை என்பது சமயத் துறப்பு மற்றும் தெய்வ நிந்தனை ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. திரிபுக் கொள்கையாளர் தம் சமயத்தைத் துறந்ததாகவோ அல்லது தாம் இறைவனை நிந்தனை செய்வதாகவோ கொள்வதில்லை.[2][3]
முற்காலத்தில் குறிக்கத்தக்க சமயப் படிப்பினை மீறல்களைக் குறிக்க இப்பதம் பயன்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமயக் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூட குறிக்கப்பயன்படுத்தப்படுகிறது.[4]
சில இசுலாமிய, கிறித்தவ மற்றும் யூத கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளில் திரிபுக் கொள்கை மரண தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது, பல நாடுகளில் இன்றும் உள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Heresy | Define Heresy at Dictionary.com". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-15.
- ↑ "Apostasy | Learn everything there is to know about Apostasy at". Reference.com. Archived from the original on 2013-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-04-15.
- ↑ "Definitions of "blasphemy" at Dictionary.com". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-15.
- ↑ "Oxford Dictionaries: heresy". Archived from the original on 2015-01-03. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.